பச்சை மிளகாய் சட்னி - Pacha Milagai Chutney Recipe - Green Chili Chutney - Sidedish for Idli / Dosai


print this page PRINT

என்னுடைய Blog Reader திருமதி. Kasthuri அனுப்பிய ரெஸிபி இது. நன்றி கஸ்தூரி.  அதனை நான் செய்து பார்த்தேன். மிகவும் அருமையாக இருந்தது.

எங்க வீட்டில் இதே மாதிரி பச்சை மிளகாயிற்கு பதிலாக காய்ந்த மிளகாய் வைத்து கார சட்னி செய்வோம். ஆனால் பச்சை மிளகாய் சேர்ப்பதால் சுவையே மிகவும் வித்தியசமாக சூப்பராக இருக்கின்றது.

இதில் Correctஆன அளவில் காரம் + புளிப்பு இருந்தால் தான் சட்னி சுவையாக இருக்கும்.

நீங்களும் செய்து பார்த்துவிட்டு உங்கள் அன்பான கருத்தினை தெரிவிக்கவும்.

சட்னி செய்ய தேவைப்படும் நேரம் : 5 - 8 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
  .  பச்சை மிளகாய் - 10
  .  பூண்டு - 10 பல் தோல் நீக்கியது
  .  வெங்காயம் - 1 பெரியது
  .  புளி - நெல்லிக்காய் அளவு / புளி பேஸ்ட் - 1/2 தே.கரண்டி
  .  எண்ணெய் - 1 மேஜை கரண்டி
  .  உப்பு - தேவையான அளவு

தாளித்து சேர்க்க :
  .  எண்ணெய் - 1 மேஜை கரண்டி
  .  கடுகு - தாளிக்க
  .  உளுத்தம் பருப்பு - 1/4 தே.கரண்டி
  .  கருவேப்பிலை - 5 இலை


செய்முறை :
.  வெங்காயத்தினை பெரிய துண்டுகளாக வெட்டி வைக்கவும்.

.  கடாயில் எண்ணெய் ஊற்றி பச்சை மிளகாய் + பூண்டு சேர்த்து முதலில் வதக்கவும்.


.  அத்துடன் வெங்காயம் சேர்த்து 1 - 2 நிமிடங்கள் வதக்கவும்.

.  கடைசியில் புளி + உப்பு சேர்த்து 2 - 3 நிமிடங்கள் ஆறவிடவும்.


.  வதக்கிய பொருட்கள் சிறிது ஆறிய பிறகு, அதனை மிக்ஸியில் போட்டு மைய அரைத்து கொள்ளவும். (விரும்பினால் 1 - 2 மேஜை கரண்டி அளவு தண்ணீர் சேர்த்து கொள்ளலாம். ஆனால் அதிகம் சேர்க்க வேண்டாம். )


.  தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து சட்னியில் சேர்த்து கலந்து கொள்ளவும்.

.  சுவையான  பச்சைமிளகாய் சட்னி ரெடி. இதனை இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிட சூப்பராக இருக்கும்.


5 comments:

ரூபன் said...

வணக்கம்
காலைப்பொழுதில் சுவையான உணவு... என்ன எடுத்து சாப்பிட முடியாது... செய்முறை விளக்கம் நன்று..பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

ரூபன் said...

வணக்கம்
காலைப்பொழுதில் சுவையான உணவு... என்ன எடுத்து சாப்பிட முடியாது... செய்முறை விளக்கம் நன்று..பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

nandoos Kitchen said...

nice chutney. tasty for idli. My mom prepares this, but I always make red chilli version. Will try this.

Kurinji said...

super...

Magees kitchen said...

Yummy Spicy chutney perfect for those spongy soft idlies...

Related Posts Plugin for WordPress, Blogger...