பூண்டு தேங்காய் சட்னி - Poondu Thengai Chutney Recipe - Garlic Coconut Chutney / Sidedish for Idli & Dosai


print this page PRINT
இது எளிதில் செய்ய கூடிய சட்னி . இந்த சட்னிக்கு , 1 முழு பூண்டினை பயன்படுத்து இருக்கின்றேன்.

பெரிய பூண்டு பலினை விட சின்ன பூண்டினை பயன்படுத்தினால் சூப்பராக இருக்கும்.

நீங்களும் செய்து பார்த்துவிட்டு உங்கள் கருத்தினை தெரிவிக்கவும்.

செய்ய தேவைப்படும் நேரம் : 5 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
  .  பூண்டு - 10 - 12 பல் (தோல் நீக்கியது)
  .  காய்ந்த மிளகாய் - 6 -8
  .  தேங்காய் துறுவல் - 1/2 கப்
  .  புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
  .  உப்பு - தேவையான அளவு

தாளித்து சேர்க்க :
  .  எண்ணெய் - 1 மேஜை கரண்டி
  .  கடுகு, உளுத்தம்பருப்பு - தாளிக்க
  .  கருவேப்பிலை - 5 இலை


செய்முறை :
  .  கடாயில் 1 தே.கரண்டி எண்ணெய் ஊற்றி பூண்டினை சேர்த்து நன்றாக வதக்கி தனியாக வைக்கவும்.

  .  அதே கடாயில் காய்ந்த மிளகாயினை போட்டு வறுத்து கொள்ளவும்.


  .  காய்ந்த மிளகாயினை போட்டு மிக்ஸியில் பொடித்து வைக்கவும்.


  .  அத்துடன் தேங்காய் துறுவல் + புளி + தேவையான அளவு உப்பு + சிறிது தண்ணீர் சேர்த்து மைய அரைத்து கொள்ளவும்.


  .  பிறகு அதில் வறுத்த பூண்டு பல் சேர்த்து மேலும் மைய அரைத்து வைக்கவும்.


  .  தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து சட்னியில் சேர்க்கவும்.

  .  சுவையான பூண்டு சட்னி ரெடி. இதனை இட்லி, தோசை, பணியாரத்துடன் சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும்.Linking this post to "Friendship 5 series" started by Geetha Achal & Savitha...


3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நன்றி சகோதரி...

Veena Theagarajan said...

Garlic chutney looks so yum! my mum always add Coconut ...

ADHI VENKAT said...

சூப்பர்ங்க... சட்னிய விட குழிப்பணியாரம் கண்களை நகர விட மறுக்கிறது...:)

Related Posts Plugin for WordPress, Blogger...