தக்காளி தொக்கு - Thakkali Thokku Recipe - Side dish for Idli , Dosai - Tomato Thokku recipe


print this page PRINT
எளிதில் செய்ய கூடிய சுவையான தக்காளி தொக்கு இது. இட்லி , தோசை, சப்பாத்திக்கு இது சூப்பர்ப் காம்பினேஷன்.

இதில் தக்காளியுடன் தூள் வகைகள் சேர்த்து நன்றாக வதங்கிய பிறகு தான் தண்ணீர் சேர்க்க வேண்டும்.

இத்துடன் பச்சை மிளகாய் சேர்ப்பது நன்றாக இருக்கும்.

இட்லி / தோசைக்கு செய்யும் பொழுது தண்ணீர் கூடுதலாகவும், அதே மாதிரி சப்பாத்திக்கு செய்யும் பொழுது தண்ணீர் சிறிது குறைவாக சேர்த்து கொள்ளவும்.

நீங்களும் செய்து பார்த்துவிட்டு உங்கள் அன்பான கருத்தினை தெரிவிக்கவும்.

சமைக்க தேவைப்படும் நேரம் : 10 - 15 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
   .  வெங்காயம் - 1 பெரியது
   .  தக்காளி - 3
   .  பச்சை மிளகாய் - 3
   .  கொத்தமல்லி, கருவேப்பிலை - சிறிதளவு

சேர்க்க வேண்டிய தூள் வகைகள் :
   .  மஞ்சள் தூள் - 1/4 தே.கரண்டி
   .  மிளகாய் தூள் - 1 தே.கரண்டி
   .  உப்பு - தேவையான அளவு

முதலில் தாளிக்க :
   .  எண்ணெய் - 1 மேஜை கரண்டி
   .  கடுகு - தாளிக்க
   .  வெந்தயம் - 4 - 5
   .  உளுத்தம் பருப்பு -1/2 தே.கரண்டி


செய்முறை :
.  வெங்காயத்தினை பொடியாக நறுக்கி வைக்கவும். தக்காளியினை நீளமான துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். பச்சை மிளகாயினை இரண்டாக கீறி வைக்கவும்.

.  கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் கடுகு + வெந்தயம் + உளுத்தம் பருப்பு சேர்த்து தாளித்து கொள்ளவும்.

.  இத்துடன் பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தினை சேர்த்து வதக்கவும்.


.  வெங்காயம் சிறிது வதங்கிய பிறகு அத்துடன் தக்காளி + பச்சைமிளகாய் சேர்த்து 1 - 2 நிமிடங்கள் வதக்கவும்.

.  இத்துடன் சேர்க்க கொடுத்துள்ள தூள் வகைகள் சேர்த்து நன்றாக கிளறி வதக்கவும்.


.  வதக்க வதக்க தக்காளியில் இருந்து தண்ணீர் வரும்.  அந்த தண்ணீரிலேயே நன்றாக குழைந்து கரையும் வரை வதக்கவும். 


.  தக்காளி நன்றாக குழைந்த பிறகு அத்துடன் 1 கப் தண்ணீர் சேர்த்து 3  - 4 நிமிடங்கள் கொதிக்கவிடவும்.


.  கடைசியில் கருவேப்பிலை + கொத்தமல்லி தூவி பறிமாறவும்.

.  சூடான இட்லி, தோசையுடன் இந்த தக்காளி தொக்குடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.


3 comments:

RAJUKHAN SR RAJESH said...

turmeric powder - 1/4 tsp & turmeric powder - 1 tsp ., which one is
correct ? pls see your tomato recipe .

GEETHA ACHAL said...

Updated...Thanks Rajesh...

RAJUKHAN SR RAJESH said...


Thanks Geetha for fast(cooking) updated

Related Posts Plugin for WordPress, Blogger...