தேங்காய் சம்பல் - Thengai Sambal Recipe for Idiyappam - Side dish for Breakfast


print this page PRINT
எளிதில் செய்ய கூடிய சம்பல் இது. இதனை இடியாப்பம், தோசை, ரொட்டி போன்றவையுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.

இதில் காரத்திற்கு காய்ந்த மிளகாயினை பொடித்து சேர்த்து இருக்கின்றேன். விரும்பினால் மிளகாய் தூள் சேர்த்து கொள்ளலாம்.

துறுவிய தேங்காயிற்கு பதிலாக தேங்காய் துண்டுகள் சேர்த்து கொரகொரப்பாக அரைத்த பிறகு வெங்காய சேர்த்து அரைக்கவும்.

சின்ன வெங்காயம் சேர்ப்பது கூடுதல் சுவையினை தரும்.

புளிப்பிறகு எலுமிச்சை சாறுக்கு பதிலாக விரும்பினால் புளி சேர்க்கலாம். ஆனால் எலுமிச்சை சாறு தனி டேஸ்ட் கொடுக்கும்.

கண்டிப்பாக கருவேப்பில்லை + சோம்பு சேர்க்கவும்.

நீங்களும் செய்து பார்த்துவிட்டு உங்கள் கருத்தினை தெரிவிக்கவும்.

செய்ய தேவைப்படும் நேரம் : 5 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
   .  தேங்காய் துறுவல் - 1 கப்
   .  சின்ன வெங்காயம் - 5
   .  காய்ந்த மிளகாய் - 5 - 8 (காரத்திற்கு ஏற்ப)
   .  எலுமிச்சை சாறு - 1 மேஜை கரண்டி
   .  உப்பு - தேவையான அளவு

தாளித்து சேர்க்க :
   .  எண்ணெய் - 1 தே.கரண்டி
   .  சோம்பு - 1/2 தே.கரண்டி
   .  கருவேப்பிலை - 5 இலை


செய்முறை :
.   சின்ன வெங்காயத்தின் தோலினை நீக்கிவிடவும். காய்ந்த மிளாயினை கடாயில் போட்டு 1 நிமிடம் வறுத்து கொள்ளவும். 

.   அதே கடாயில் எண்ணெய் ஊற்றி சோம்பு + கருவேப்பிலை தாளித்து வைக்கவும்.

.   மிக்ஸியில் முதலில் காய்ந்த மிளகாயினை போட்டு நன்றாக பொடித்து கொள்ளவும்.


.   மிளகாய் நன்றாக பொடித்த பிறகு அத்துடன் துறுவிய தேங்காய்  + சின்ன வெங்காயம் சேர்த்து 4 - 5 முறை Pulse Modeயில் அடித்து கொள்ளவும்.


.   கடைசியில் தாளித்த சோம்பு + கருவேப்பிலை + எலுமிச்சை சாறு + தேவையான அளவு உப்பு சேர்த்து மேலும் 3 - 4 முறை Pulse Modeயில் அடித்து கொள்ளவும்.


.   எளிதில் செய்ய கூடிய சுவையான சம்பல் ரெடி. இதனை இடியாப்பத்துடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.Linking this post to "Friendship 5 series" started by Geetha Achal & Savitha...


2 comments:

Veena Theagarajan said...

my mom specialty.. super yum!

Sathya Priya said...

romba pudusa iruku geetha..arumai yana post

Related Posts Plugin for WordPress, Blogger...