ஆட்டுகால் பாயா - Aattu Kaal Paya Recipe - Guest Post by Savitha Ramesh


print this page PRINT

என்னுடைய தோழி, சவிதா ரமேஷ் இதனை Guest Postயிற்காக செய்து கொடுத்தாங்க.

சவிதா Non-veg வகையினை ரொம்ப சூப்பராக செய்வாங்க..நான் மட்டன் செய்வதில்லை என்பதால் அவங்களிடன் மட்டன் Recipeயினை தான் கேட்டேன். உடனே எனக்காக இந்த ரெஸிபி செய்து கொடுத்தாங்க..

அவங்க ப்ளாகில் நிறைய Non-veg Recipes & Baking Recipes இருக்கும். 

மிகவும் சுவையான இந்த ஆட்டு கால் பாயாவினை நீங்களும் செய்து பார்த்துவிட்டு உங்கள் அன்பான கருத்தினை தெரிவிகக்வும். நன்றி சவிதா...

சமைக்க தேவைப்படும் நேரம் : 30 நிமிடங்கள்
பிரஸர் குக்கரில் வேகவைத்து கொள்ள தேவையான பொருட்கள் :
  .   ஆட்டு கால் - 1/2 கிலோ
  .   மஞ்சள் தூள் - 1/2 தே.கரண்டி
  .   மிளகாய் தூள் - 2 மேஜை கரண்டி
  .   தனியா தூள் - 1 மேஜை கரண்டி
  .   இஞ்சி பூண்டு விழுது - 1 தே.கரண்டி
  .   எண்ணெய் - 1 மேஜை கரண்டி
  .   தண்ணீர் - தேவையான அளவு

குழம்பு செய்ய :
  .   எண்ணெய் - 1 தே.கரண்டி
  .   சோம்பு - 1/2 தே.கரண்டி, கருவேப்பிலை - 10 இலை
  .   வெங்காயம் - 1
  .   தக்காளி - 2
  .   பச்சைமிளகாய் - 2
  .   இஞ்சி பூண்டு விழுது - 1 தே.கரண்டி
  .   மிளகு தூள் -சிறிதளவு
  .   உப்பு - தேவையான அளவு

அரைத்து கொள்ள :
  .   தேங்காய் - 2 துண்டுகள்

செய்முறை :
.   எலும்பினை நன்றாக கழுவி கொள்ளவும். சூடான தணலில் ஒவ்வொரு கால் எடுத்து சூட்டு கொள்ளவும். (கவனிக்க : கண்டிப்பாக இந்த Stepயினை Follow செய்யவும். இப்படி காலினை சூடுவதால் எதாவது எலும்பில் முடி ஓட்டி கொண்டு இருந்தால் போய்விடும். )


.   பிரஸர் குக்கரில் 1 தே.கரண்டி எண்ணெய் ஊற்றி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

.   அத்துடன் சூட்டு வைத்துள்ள கால் + மஞ்சள் தூள் + மிளகாய் தூள் + தனியா தூள் + தேவையான அளவு தண்ணீர் ஊற்றி  3 - 4 விசில் வரும் வரை வேகவிடவும். .   தேங்காயினை மிக்ஸியில் போட்டு மைய அரைத்து கொள்ளவும். 

.   பிரஸர் குக்கரில் விசில் அடங்கும் சமயம், ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சோம்பு + கருவேப்பிலை சேர்த்து தாளித்து கொள்ளவும்.

.   அதில் வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் சிறிது வதங்கியதும் அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.


.   பிறகு தக்காளி + பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும். 

.   இப்பொழுது இதில் வேகவைத்துள்ள எலும்பினை சேர்த்து கொள்ளவும்.

.   அத்துடன் அரைத்த தேங்காய் விழுது + மிளகு தூள் + தேவையான அளவு உப்பு சேர்த்து தட்டு போட்டு மூடி கொதிக்கவிடவும்.


.   குழம்பில் இருந்து எண்ணெய் பிரிந்து வரும் வரை வேகவிடவும். 

.   சுவையான ஆட்டு கால் பாயா ரெடி. இதனை இடியாப்பம், இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிட மிகவும் சூப்பராக இருக்கும்.


கல்யாண மோர் குழம்பு - Kalyana Mor Kuzhambu recipe - Thayir Kuzhambu Recipe


print this page PRINT
இது மிகவும் எளிதில் செய்ய கூடிய மோர் குழம்பு. அரிசி + பருப்பு மட்டும் ஊறவைத்து இருந்தால் குழம்பு 10 நிமிடங்களில் ரெடி.

இதில் அனைத்து பொருட்களையும் நன்றாக அரைத்து அத்துடன் தயிர் சேர்த்து கலந்து கொள்ளவும்.

1 கப் தயிர் என்றால் அத்துடன் 1 + 1/2 கப் தண்ணீர் சேர்த்து கொள்ளவும். நீங்களும் செய்து பார்த்துவிட்டு உங்கள் அன்பான கருத்தினை தெரிவிக்கவும்.. (கொஞ்சம் Thick ஆக விரும்பினால் தண்ணீரின் அளவினை குறைத்து கொள்ளலாம். )

நீங்களும் செய்து பார்த்துவிட்டு உங்கள் அன்பான கருத்தினை தெரிவிக்கவும்...

இதனை பாருங்க.... அம்மாவின் ஸ்பெஷல் மோர் குழம்பு
                                         கடலைமாவு மோர் குழம்பு

அரிசி + பருப்பினை ஊறவைக்க : குறைந்தது 15 நிமிடங்கள்
சமைக்க தேவைப்படும் நேரம் : 15 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
  .   தயிர் - 2 கப்
  .   மஞ்சள் தூள் - 1/2 தே.கரண்டி
  .   பெருங்காயம் - 1/4 தே.கரண்டிக்கும் குறைவாக
  .   உப்பு - தேவையான அளவு

ஊறவைத்து கொள்ள :
  .   அரிசி - 2 தே. கரண்டி
  .   துவரம் பருப்பு - 2 தே. கரண்டி

அரைத்து கொள்ள :
  .   ஊறவைத்த அரிசி + பருப்பு
  .   தனியா - 1 தே.கரண்டி
  .   தேங்காய் - 2 துண்டு
  .   பச்சை மிளகாய் -  4 - 5 (காரத்திற்கு ஏற்ப)
  .   இஞ்சி - 1 இன்ச் துண்டு
  .   சீரகம் - 1/2 தே.கரண்டி

முதலில் தாளிக்க :
  .   எண்ணெய் - 1 தே.கரண்டி
  .   கடுகு, உளுத்தம்பருப்பு - தாளிக்க
  .   சீரகம்- 1/4 தே.கரண்டி
  .   கருவேப்பிலை - 10 இலை
  .   காய்ந்த மிளகாய் - 2


செய்முறை :
.  அரிசி + பருப்பினை சேர்த்து குறைந்தது 15 நிமிடங்கள் ஊறவைத்து கொள்ளவும்.

.  ஊறவைத்த அரிசி, பருப்பு + தனியா + தேங்காய் + பச்சைமிளகாய் + இஞ்சி + சீரகம்  + சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் போட்டு மைய அரைத்து தனியாக வைத்து கொள்ளவும்.


.  மிக்ஸியில் தயிர் + பெருங்காயம் + மஞ்சள் தூள் + 2 கப் தண்ணீர் சேர்த்து அடித்து கொள்ளவும்.


.  அடித்து வைத்துள்ள தயிருடன் முன்னர் அரைத்த அரிசி தேங்காய் விழுதினை சேர்த்து கலந்து வைக்கவும். அத்துடன் தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.

.  கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு + உளுத்தம்பருப்பு + சீரகம் + கருவேப்பிலை + காய்ந்த மிளகாய் சேர்த்து தாளித்து கொள்ளவும்.


.  அத்துடன் தயிர் கலவையினை சேர்த்து 1 கொதி வரும் வரை கொதிவிடவும்.


.  சுவையான மோர் குழம்பு ரெடி. இதனை வறுவல்,வடையுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.


ஹோட்டல் உருளைகிழங்கு மசாலா - Hotel Potato Masala for Chapati / Poori Recipe


print this page PRINT

குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிட கூடிய உருளைகிழங்கு மசால் இது. இதில் நான் வெரும் உருளைகிழங்கு மட்டுமே சேர்த்து இருக்கின்றேன். விரும்பினால் இதில் 1/4 கப் Carrots + Peas சேர்த்தால் Colorfulஆக இருக்கும்.

இதில் கண்டிப்பாக பொட்டுக்கடலை மாவினை சேர்ப்பது தான் சுவையினை தரும். அதே மாதிரி கொடுத்துள்ள அளவினை விட அதிகம் சேர்க்க வேண்டாம்.

இதில் காரத்திற்கு பச்சை மிளகாய் மட்டுமே சேர்ப்பதால் அவரவர் காரத்திற்கு ஏற்ப பச்சைமிளகாயினை சேர்த்து கொள்ளவும்.

நான் எப்பொழுது உருளைகிழங்கினை தோல் நீக்கி , அதனை சிறிய துண்டுகளாக வேகவைத்து கொள்வதால் சீக்கிரமாக வெந்துவிடும். 

நீங்களும் செய்து பார்த்துவிட்டு உங்கள் அன்பான கருத்தினை தெரிவிக்கவும். இது என்னுடைய தோழி காயத்ரியின் ஸ்பெஷல் Recipe.....

சமைக்க தேவைப்படும் நேரம் : 15 - 20 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
  .   உருளைகிழங்கு - 1/4 கிலோ
  .   வெங்காயம் - 2
  .   பச்சை மிளகாய் - 4 - 5 (காரத்திற்கு ஏற்ப)
  .   இஞ்சி - மிகவும் சிறிய துண்டு 
  .   மஞ்சள் தூள் - 1/2 தே.கரண்டி
  .   உப்பு - தேவையான அளவு

முதலில் தாளிக்க :
  .   எண்ணெய் - 1 மேஜை கரண்டி
  .   கடுகு - தாளிக்க
  .   கடலைப்பருப்பு - 2 தே.கரண்டி
  .   கருவேப்பிலை - 10 இலை

அரைத்து கொள்ள :
  .   பொட்டுக்கடலை - 2 தே.கரண்டி 


செய்முறை :
.  உருளைகிழங்கினை தோல் நீக்கி Medium Size துண்டுகளாக வெட்டி கொள்ளவும். அதனை தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 7 - 8 நிமிடங்கள் வேகவைத்து கொள்ளவும்.


.  பொடிக்க கொடுத்துள்ள பொட்டுகடலையினை மிக்ஸியில் போட்டு மாவு மாதிரி அரைத்து கொள்ளவும். இதில் சேர்க்க 1 தே.கரண்டி பொட்டுக்கடலை மாவு போதும் (1 teaspoon).


(நான் நிறைய பொட்டுக்கடலையினை போட்டு அரைத்து இருக்கின்றேன்.மீது மாவினை வைத்து பொட்டுகடலை இட்லி பொடி/ உருண்டை செய்து பாருங்க...நன்றாக இருக்கும். )

.  வெங்காயத்தினை மெல்லிய நீளமான துண்டுகளாக வெட்டி வைக்கவும். பச்சை மிளகாயினை இரண்டாக கீறி வைக்கவும். இஞ்சியினை பொடியாக நறுக்கவும்.

.  கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு + கடலைப்பருப்பு + கருவேப்பிலை சேர்த்து தாளித்து அத்துடன் வெங்காயம் + இஞ்சி + பச்சைமிளகாய் சேர்த்து 2 - 3 நிமிடங்கள் வதக்கவும்.


.  இப்பொழுது வெந்த உருளைகிழங்கினை அந்த தண்ணீருடனே சேர்த்து கடாயில் ஊற்றவும்.

.  அதில் தேவையான அளவு உப்பு + மஞ்சள் தூள் சேர்த்து கலந்து மேலும் 2  நிமிடங்கள் வேகவிடவும்.


.  1 - 2 தே.கரண்டி பொட்டுக்கடலை மாவினை சிறிது தண்ணீர் சேர்த்து கட்டி இல்லாமல் கரைத்து கொள்ளவும். (கவனிக்க : மாவினை ரொம்ப அதிகம் சேர்க்க வேண்டாம். )

.  கலந்து வைத்துள்ள மாவினை உருளை கலவையில் சேர்த்து கலக்கவும்.


.  இதனை மேலும் 2 - 3 நிமிடங்கள் வேகவிட்டு, விரும்பினால் மத்து / கரண்டியினை வைத்து உருளைகிழங்கினை சிறிது மசித்துவிடலாம்.


.  இப்பொழுது சுவையான உருளைகிழங்கு மசால் ரெடி. இதனை சப்பாத்தி, பூரியுடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.Collection of Kids Heart Shaped Food Ideas - Valentine Heart Shaped Recipes

Chocolate 
strawberry Heart 
Shaped Colored Pancakes Potato Smiles Heart Cookie 
cutter
                  Homemade Chocolate Strawberry Bouquet

Heart Shaped Potato Smiles - Kids Heart Shaped Food Ideas

print this page PRINT

எளிதில் செய்ய கூடிய சத்தான மாலை நேர Snack. குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவாங்க...

இதனை நான் Heart Shapeயில் செய்து இருக்கின்றேன். அவரவர் விரும்பிய வடிவத்தில் இதனை செய்து கொடுக்கலாம். அதே மாதிரி விரும்பிய மசாலா பொருட்கள் சேர்க்கலாம்.

நான் தோசை கல்லில் டோஸ்ட் செய்து இருக்கின்றேன். இதனை எண்ணெயில் பொரித்தும் கொடுக்கலாம்.

நீங்களும் செய்து பார்த்துவிட்டு உங்கள் அன்பான கருத்தினை தெரிவிக்கவும்..இந்த  Potato Smiles யினை எல்லாம் செய்தது Akshata தான்...

சமைக்க தேவைப்படும் நேரம் : 30 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
   .   உருளைகிழங்கு - 3 பெரியது
   .   அரிசி மாவு + Corn Flour -  2 மேஜை கரண்டி
   .   மிளகு தூள் - 1/2 தே.கரண்டி
   .   பொடியாக நறுக்கிய கொத்தமல்லி / Chives - 1 தே.கரண்டி
   .   பொடியாக நசுக்கிய பூண்டு - 2 பல்
   .   உப்பு - தேவையான அளவு
   .   எண்ணெய் - சிறிதளவு

Smiles  செய்ய :
   .   Straw  . Spoon


செய்முறை :
.  உருளைகிழங்கினை தோல் நீக்கி பொடியாக நறுக்கி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேகவைத்து கொள்ளவும்.


.  வேகவைத்த உருளைகிழங்கினை நன்றாக மசித்து கொள்ளவும்.

.  மசித்த உருளைகிழங்குடன் அரிசி மாவு + Corn Flour + மிளகு தூள் + பொடியாக நறுக்கிய கொத்தமல்லி + பூண்டு + உப்பு சேர்த்து நன்றாக கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.


.  ஒரு சிறிய உருண்டையினை உருட்டி அதனை Heart Shaped Cookie Cutter யினை வைத்து Heart Shapeயில் வெட்டி வைக்கவும்.


.  இப்பொழுது Strawவினை வைத்து இரண்டு கண்கள் செய்யவும்.


.  அதே மாதிரி Spoonயினை வைத்து வாய் பகுதி Smileயினை செய்யவும். இப்பொழுது  Potato Smiles ரெடி.


.  இதனை தேவையான எண்ணெய் ஊற்றி கடாயில் ப்ரை செய்து இருக்கின்றேன். விரும்பினால் இதனை deep fryயும் செய்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.


.  குழந்தைகள் விரும்ப்பி சாப்பிட கூட  Potato Smiles ரெடி. 


Linking this post to "Friendship 5 series" started by Geetha Achal & Savitha...


சாக்கோலேட் ஸ்ட்ராபெர்ரி - Chocolate Strawberry - Kids Valentine Food Ideas


print this page PRINT
குழந்தைகள் விரும்பும் Chocolateயினை Strawberryயுடன் சேர்த்து கொடுக்கும் பொழுது விரும்பி சாப்பிடுவாங்க...

நான் இதில் Dark Chocolate Chipsயினை பயன்படுத்து இருக்கின்றேன். இதே மாதிரி White Chocolate Chipயிலும் செய்யலாம்.

அவரவர் விருப்பதிற்கு ஏற்ற மாதிரி செய்து கொள்ளலாம். இதே மாதிரி மற்ற பழ வகைகளிலும் செய்யலாம். 

நீங்களும் செய்து பார்த்துவிட்டு உங்கள் அன்பான கருத்தினை தெரிவிக்கவும்...

செய்ய தேவைப்படும் நேரம் : 10 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
  .   Strawberry - 10
  .   Chocolate Chips - 1/2 கப்
  .   பால் - 1 மேஜை கரண்டி
  .   Tooth Picks
  .   Sprinkles - மேலே தூவ


செய்முறை :
.   Chocolate Chips + பால் சேர்த்து Microwave Safe Bowlயில் வைத்து Microwave 1 - 2 நிமிடங்கள் வைத்தால் நன்றாக Melt ஆகி இருக்கும். 

.   அதனை Spoon வைத்து நன்றாக கலந்து கொள்ளவும். இப்பொழுது Strawberryயினை டிப் செய்வதற்கு Chocolate கலவை ரெடி.


.   ஓவ்வொரு Strawberryயிலுல் அடியில் ஒரு Tooth Pickயினை சொருகி வைக்கவும். இப்படி வைத்தால் Chocolate யில் Strawberryயினை டிப் செய்வது ஈஸியாக இருக்கும்.

.   இப்பொழுது ஒரு பழத்தினை எடுத்து அதனை  Chocolate யில் டிப் செய்து எடுக்கவும்.


.   அதே மாதிரி அனைத்து பழத்திலும் செய்து கொள்ளவும். டிப் செய்த பழத்தினை Fridgeயில் 10 நிமிடங்கள் வைத்தால் நன்றாக ஒட்டு கொள்ளும்.

(நான் டிப் செய்த பழத்தினை வாழைப்பழத்தில் சொருகி வைத்து இருக்கின்றேன். இதனால்  Chocolate  அனைத்து பக்கமும் நன்றாக காய்ந்து இருக்கும். விரும்பினால் நீங்கள் Celery Stick மீது கூட வைக்கலாம்.)


.   இதே மாதிரி another coating of melted  Chocolateயினை கொடுக்கவும். அப்பொழுது அதன் மீது Sprinklesயினை தூவி விடவும். அதனையும் அப்படியே Fridgeயில் வைத்துவிடவும்.


.   5 - 10 நிமிடங்கள் வெளியில் எடுத்து வைத்த பிறகு பறிமாறும். குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவாங்க.Linking this post to "Friendship 5 series" started by Geetha Achal & Savitha...


Related Posts Plugin for WordPress, Blogger...