ஆட்டுகால் பாயா - Aattu Kaal Paya Recipe - Guest Post by Savitha Ramesh


print this page PRINT

என்னுடைய தோழி, சவிதா ரமேஷ் இதனை Guest Postயிற்காக செய்து கொடுத்தாங்க.

சவிதா Non-veg வகையினை ரொம்ப சூப்பராக செய்வாங்க..நான் மட்டன் செய்வதில்லை என்பதால் அவங்களிடன் மட்டன் Recipeயினை தான் கேட்டேன். உடனே எனக்காக இந்த ரெஸிபி செய்து கொடுத்தாங்க..

அவங்க ப்ளாகில் நிறைய Non-veg Recipes & Baking Recipes இருக்கும். 

மிகவும் சுவையான இந்த ஆட்டு கால் பாயாவினை நீங்களும் செய்து பார்த்துவிட்டு உங்கள் அன்பான கருத்தினை தெரிவிகக்வும். நன்றி சவிதா...

சமைக்க தேவைப்படும் நேரம் : 30 நிமிடங்கள்
பிரஸர் குக்கரில் வேகவைத்து கொள்ள தேவையான பொருட்கள் :
  .   ஆட்டு கால் - 1/2 கிலோ
  .   மஞ்சள் தூள் - 1/2 தே.கரண்டி
  .   மிளகாய் தூள் - 2 மேஜை கரண்டி
  .   தனியா தூள் - 1 மேஜை கரண்டி
  .   இஞ்சி பூண்டு விழுது - 1 தே.கரண்டி
  .   எண்ணெய் - 1 மேஜை கரண்டி
  .   தண்ணீர் - தேவையான அளவு

குழம்பு செய்ய :
  .   எண்ணெய் - 1 தே.கரண்டி
  .   சோம்பு - 1/2 தே.கரண்டி, கருவேப்பிலை - 10 இலை
  .   வெங்காயம் - 1
  .   தக்காளி - 2
  .   பச்சைமிளகாய் - 2
  .   இஞ்சி பூண்டு விழுது - 1 தே.கரண்டி
  .   மிளகு தூள் -சிறிதளவு
  .   உப்பு - தேவையான அளவு

அரைத்து கொள்ள :
  .   தேங்காய் - 2 துண்டுகள்

செய்முறை :
.   எலும்பினை நன்றாக கழுவி கொள்ளவும். சூடான தணலில் ஒவ்வொரு கால் எடுத்து சூட்டு கொள்ளவும். (கவனிக்க : கண்டிப்பாக இந்த Stepயினை Follow செய்யவும். இப்படி காலினை சூடுவதால் எதாவது எலும்பில் முடி ஓட்டி கொண்டு இருந்தால் போய்விடும். )


.   பிரஸர் குக்கரில் 1 தே.கரண்டி எண்ணெய் ஊற்றி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

.   அத்துடன் சூட்டு வைத்துள்ள கால் + மஞ்சள் தூள் + மிளகாய் தூள் + தனியா தூள் + தேவையான அளவு தண்ணீர் ஊற்றி  3 - 4 விசில் வரும் வரை வேகவிடவும். .   தேங்காயினை மிக்ஸியில் போட்டு மைய அரைத்து கொள்ளவும். 

.   பிரஸர் குக்கரில் விசில் அடங்கும் சமயம், ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சோம்பு + கருவேப்பிலை சேர்த்து தாளித்து கொள்ளவும்.

.   அதில் வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் சிறிது வதங்கியதும் அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.


.   பிறகு தக்காளி + பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும். 

.   இப்பொழுது இதில் வேகவைத்துள்ள எலும்பினை சேர்த்து கொள்ளவும்.

.   அத்துடன் அரைத்த தேங்காய் விழுது + மிளகு தூள் + தேவையான அளவு உப்பு சேர்த்து தட்டு போட்டு மூடி கொதிக்கவிடவும்.


.   குழம்பில் இருந்து எண்ணெய் பிரிந்து வரும் வரை வேகவிடவும். 

.   சுவையான ஆட்டு கால் பாயா ரெடி. இதனை இடியாப்பம், இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிட மிகவும் சூப்பராக இருக்கும்.


2 comments:

Jayanthy Kumaran said...

ooooh...am salivating here...

Shamee S said...

ஆட்டுகால் பாயா சூப்பர்.இடியாப்பம் பரோட்டாக்கு செமையா இருக்கும்.
இருவருக்கும் வாழ்த்துக்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...