ஹோட்டல் உருளைகிழங்கு மசாலா - Hotel Potato Masala for Chapati / Poori Recipe


print this page PRINT

குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிட கூடிய உருளைகிழங்கு மசால் இது. இதில் நான் வெரும் உருளைகிழங்கு மட்டுமே சேர்த்து இருக்கின்றேன். விரும்பினால் இதில் 1/4 கப் Carrots + Peas சேர்த்தால் Colorfulஆக இருக்கும்.

இதில் கண்டிப்பாக பொட்டுக்கடலை மாவினை சேர்ப்பது தான் சுவையினை தரும். அதே மாதிரி கொடுத்துள்ள அளவினை விட அதிகம் சேர்க்க வேண்டாம்.

இதில் காரத்திற்கு பச்சை மிளகாய் மட்டுமே சேர்ப்பதால் அவரவர் காரத்திற்கு ஏற்ப பச்சைமிளகாயினை சேர்த்து கொள்ளவும்.

நான் எப்பொழுது உருளைகிழங்கினை தோல் நீக்கி , அதனை சிறிய துண்டுகளாக வேகவைத்து கொள்வதால் சீக்கிரமாக வெந்துவிடும். 

நீங்களும் செய்து பார்த்துவிட்டு உங்கள் அன்பான கருத்தினை தெரிவிக்கவும். இது என்னுடைய தோழி காயத்ரியின் ஸ்பெஷல் Recipe.....

சமைக்க தேவைப்படும் நேரம் : 15 - 20 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
  .   உருளைகிழங்கு - 1/4 கிலோ
  .   வெங்காயம் - 2
  .   பச்சை மிளகாய் - 4 - 5 (காரத்திற்கு ஏற்ப)
  .   இஞ்சி - மிகவும் சிறிய துண்டு 
  .   மஞ்சள் தூள் - 1/2 தே.கரண்டி
  .   உப்பு - தேவையான அளவு

முதலில் தாளிக்க :
  .   எண்ணெய் - 1 மேஜை கரண்டி
  .   கடுகு - தாளிக்க
  .   கடலைப்பருப்பு - 2 தே.கரண்டி
  .   கருவேப்பிலை - 10 இலை

அரைத்து கொள்ள :
  .   பொட்டுக்கடலை - 2 தே.கரண்டி 


செய்முறை :
.  உருளைகிழங்கினை தோல் நீக்கி Medium Size துண்டுகளாக வெட்டி கொள்ளவும். அதனை தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 7 - 8 நிமிடங்கள் வேகவைத்து கொள்ளவும்.


.  பொடிக்க கொடுத்துள்ள பொட்டுகடலையினை மிக்ஸியில் போட்டு மாவு மாதிரி அரைத்து கொள்ளவும். இதில் சேர்க்க 1 தே.கரண்டி பொட்டுக்கடலை மாவு போதும் (1 teaspoon).


(நான் நிறைய பொட்டுக்கடலையினை போட்டு அரைத்து இருக்கின்றேன்.மீது மாவினை வைத்து பொட்டுகடலை இட்லி பொடி/ உருண்டை செய்து பாருங்க...நன்றாக இருக்கும். )

.  வெங்காயத்தினை மெல்லிய நீளமான துண்டுகளாக வெட்டி வைக்கவும். பச்சை மிளகாயினை இரண்டாக கீறி வைக்கவும். இஞ்சியினை பொடியாக நறுக்கவும்.

.  கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு + கடலைப்பருப்பு + கருவேப்பிலை சேர்த்து தாளித்து அத்துடன் வெங்காயம் + இஞ்சி + பச்சைமிளகாய் சேர்த்து 2 - 3 நிமிடங்கள் வதக்கவும்.


.  இப்பொழுது வெந்த உருளைகிழங்கினை அந்த தண்ணீருடனே சேர்த்து கடாயில் ஊற்றவும்.

.  அதில் தேவையான அளவு உப்பு + மஞ்சள் தூள் சேர்த்து கலந்து மேலும் 2  நிமிடங்கள் வேகவிடவும்.


.  1 - 2 தே.கரண்டி பொட்டுக்கடலை மாவினை சிறிது தண்ணீர் சேர்த்து கட்டி இல்லாமல் கரைத்து கொள்ளவும். (கவனிக்க : மாவினை ரொம்ப அதிகம் சேர்க்க வேண்டாம். )

.  கலந்து வைத்துள்ள மாவினை உருளை கலவையில் சேர்த்து கலக்கவும்.


.  இதனை மேலும் 2 - 3 நிமிடங்கள் வேகவிட்டு, விரும்பினால் மத்து / கரண்டியினை வைத்து உருளைகிழங்கினை சிறிது மசித்துவிடலாம்.


.  இப்பொழுது சுவையான உருளைகிழங்கு மசால் ரெடி. இதனை சப்பாத்தி, பூரியுடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.6 comments:

Srinivasan V MEG said...

அடடா மிகவும் அருமையாக இருந்தது நன்றி.இன்று காலை உணவு இதுதான்.....நீங்கள் பதிவிடும் குறிப்புகளை உடனடியாக என் மனைவியிடம் கொடுத்து விடுவேன்.....உடனே செய்தும் விடுவோம் அருமையாக இருக்கும் மிகவும் நன்றி...........

Srinivasan V MEG said...

அடடா மிகவும் அருமையாக இருந்தது நன்றி.இன்று காலை உணவு இதுதான்.....நீங்கள் பதிவிடும் குறிப்புகளை உடனடியாக என் மனைவியிடம் கொடுத்து விடுவேன்.....உடனே செய்தும் விடுவோம் அருமையாக இருக்கும் மிகவும் நன்றி.........

Srinivasan V MEG said...

அடடா மிகவும் அருமையாக இருந்தது நன்றி.இன்று காலை உணவு இதுதான்.....நீங்கள் பதிவிடும் குறிப்புகளை உடனடியாக என் மனைவியிடம் கொடுத்து விடுவேன்.....உடனே செய்தும் விடுவோம் அருமையான காலை வணக்கம்..........

Prathima Nithin said...

Looks good...But how do i get the english translation? :(

'நெல்லைத் தமிழன் said...

அம்மா, பொட்டுக் கடலைமாவுக்குப் பதிலாக நான் வெறும் கடலைமாவைக் கரைத்து ஊற்றுவேன். வெந்த உருளைக் கிழங்கில், பாதியைக் கையால் மசித்துச் சேர்த்தாலும் நன்றாக இருக்கும். இஞ்சி கொஞ்சம் அதிகமாகச் சேர்த்தால் உடம்புக்கு நல்லது. செய்முறை விளக்கம் அருமை.

ADHI VENKAT said...

எங்கம்மா இப்படித்தான் பொட்டுக்கடலை மாவு சேர்த்து செய்வாங்க. அதனால் நானும் அப்படியே....:) கிழங்கை மசித்து போட்டாலும் சரியாக இருக்கும்.

Related Posts Plugin for WordPress, Blogger...