கல்யாண மோர் குழம்பு - Kalyana Mor Kuzhambu recipe - Thayir Kuzhambu Recipe


print this page PRINT
இது மிகவும் எளிதில் செய்ய கூடிய மோர் குழம்பு. அரிசி + பருப்பு மட்டும் ஊறவைத்து இருந்தால் குழம்பு 10 நிமிடங்களில் ரெடி.

இதில் அனைத்து பொருட்களையும் நன்றாக அரைத்து அத்துடன் தயிர் சேர்த்து கலந்து கொள்ளவும்.

1 கப் தயிர் என்றால் அத்துடன் 1 + 1/2 கப் தண்ணீர் சேர்த்து கொள்ளவும். நீங்களும் செய்து பார்த்துவிட்டு உங்கள் அன்பான கருத்தினை தெரிவிக்கவும்.. (கொஞ்சம் Thick ஆக விரும்பினால் தண்ணீரின் அளவினை குறைத்து கொள்ளலாம். )

நீங்களும் செய்து பார்த்துவிட்டு உங்கள் அன்பான கருத்தினை தெரிவிக்கவும்...

இதனை பாருங்க.... அம்மாவின் ஸ்பெஷல் மோர் குழம்பு
                                         கடலைமாவு மோர் குழம்பு

அரிசி + பருப்பினை ஊறவைக்க : குறைந்தது 15 நிமிடங்கள்
சமைக்க தேவைப்படும் நேரம் : 15 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
  .   தயிர் - 2 கப்
  .   மஞ்சள் தூள் - 1/2 தே.கரண்டி
  .   பெருங்காயம் - 1/4 தே.கரண்டிக்கும் குறைவாக
  .   உப்பு - தேவையான அளவு

ஊறவைத்து கொள்ள :
  .   அரிசி - 2 தே. கரண்டி
  .   துவரம் பருப்பு - 2 தே. கரண்டி

அரைத்து கொள்ள :
  .   ஊறவைத்த அரிசி + பருப்பு
  .   தனியா - 1 தே.கரண்டி
  .   தேங்காய் - 2 துண்டு
  .   பச்சை மிளகாய் -  4 - 5 (காரத்திற்கு ஏற்ப)
  .   இஞ்சி - 1 இன்ச் துண்டு
  .   சீரகம் - 1/2 தே.கரண்டி

முதலில் தாளிக்க :
  .   எண்ணெய் - 1 தே.கரண்டி
  .   கடுகு, உளுத்தம்பருப்பு - தாளிக்க
  .   சீரகம்- 1/4 தே.கரண்டி
  .   கருவேப்பிலை - 10 இலை
  .   காய்ந்த மிளகாய் - 2


செய்முறை :
.  அரிசி + பருப்பினை சேர்த்து குறைந்தது 15 நிமிடங்கள் ஊறவைத்து கொள்ளவும்.

.  ஊறவைத்த அரிசி, பருப்பு + தனியா + தேங்காய் + பச்சைமிளகாய் + இஞ்சி + சீரகம்  + சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் போட்டு மைய அரைத்து தனியாக வைத்து கொள்ளவும்.


.  மிக்ஸியில் தயிர் + பெருங்காயம் + மஞ்சள் தூள் + 2 கப் தண்ணீர் சேர்த்து அடித்து கொள்ளவும்.


.  அடித்து வைத்துள்ள தயிருடன் முன்னர் அரைத்த அரிசி தேங்காய் விழுதினை சேர்த்து கலந்து வைக்கவும். அத்துடன் தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.

.  கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு + உளுத்தம்பருப்பு + சீரகம் + கருவேப்பிலை + காய்ந்த மிளகாய் சேர்த்து தாளித்து கொள்ளவும்.


.  அத்துடன் தயிர் கலவையினை சேர்த்து 1 கொதி வரும் வரை கொதிவிடவும்.


.  சுவையான மோர் குழம்பு ரெடி. இதனை வறுவல்,வடையுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.


4 comments:

ரூபன் said...

வணக்கம்
செய்முறை விளக்கத்துடன் அருமையான சமையல் குறிப்பு இதோ செய்து பார்க்கிறோம் பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Veena Theagarajan said...

one of my favourite.. so tasty nice presentation too

Shamee S said...

அருமையாக இருக்கிறது..மோர் குழம்பு எனக்கு பிடித்த ரெசிப்பி...உங்கள் முறையில் ஒருநாள் செய்து பார்க்கிறேன்...

Bharathi dineshkumar said...

really super...

Related Posts Plugin for WordPress, Blogger...