ஆந்திரா மாங்காய் கத்திரிக்காய் பருப்பு - Andhra Mango Brinjal Paruppu Recipe - Mango Dal - No Onion No Garlic Recipe


print this page PRINT
எளிதில் செய்ய கூடிய சத்தான மாங்காய் பருப்பு... 

மிகவும் Mildஆக இருக்கும். இதில் மாங்காயுடன் சேர்த்து கண்டிப்பாக கத்திக்காயினை சேர்த்து செய்ய வேண்டும்.

கத்திரிக்காயினை கண்டிப்பாக சேர்க்கவும். கத்திரிக்காய் சேர்க்கவில்லை என்றால் சுவையில் வித்தியசாம் இருக்கும்.

நீங்களும் செய்து பார்த்துவிட்டு உங்கள் கருத்தினை தெரிவிக்கவும்...நன்றி Sreelakshmi 

சமைக்க தேவைப்படும் நேரம் : 15 - 20 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
  .  துவரம் பருப்பு - 1 கப்
  .  மாங்காய் - 1 Medium Size
  .  கத்திரிக்காய் - 100 கிராம்
  .  பச்சை மிளகாய் - 3

சேர்க்க வேண்டிய தூள் வகைகள் :
  .  மஞ்சள் தூள் - 1/4 தே.கரண்டி
  .  மிளகாய் தூள் - 1/2 தே.கரண்டி
  .  உப்பு - தேவையான அளவு

கடைசியில் தாளிக்க :
  .  எண்ணெய் - 1 மேஜை கரண்டி
  .  கடுகு, சீரகம் - தாளிக்க
  .  பெருங்காயம் - 1/8 தே.கரண்டி
  .  காய்ந்த மிளகாய் - 1
  .  கருவேப்பிலை - 5 இலை


செய்முறை :
  .  பருப்பினை கழுவி 2 + 1/2 கப் தண்ணீர் சேர்த்து ஊறவைத்து கொள்ளவும்.

  .  மாங்காய் + கத்திரிக்காயினை Medium Size துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.


  .  மாங்காய் + கத்திரிக்காய் + பச்சை மிளகாயினை ஒரு தனி பாத்திரத்தில் வைக்கவும். (கவனிக்க :  இந்த பாத்திரத்தில்  தண்ணீர் எதுவும் சேர்க்க வேண்டாம். )

  .  பிரஸர் குக்கரில் பருப்புடன் சேர்க்க கொடுத்துள்ள தூள் வகைகள் சேர்த்து கொள்ளவும். அதில் அந்த பாத்திரத்தினையும் வைத்து மூடி 4 - 5 விசில் வரும் வரை வேகவிடவும்.


  .  பிரஸர் குக்கரில்.  மாங்காய் வேகவைத்த பாத்திரத்தினை மட்டும் வெளியில் எடுத்து கொண்டு தனியாக வைத்து, பருப்பினை மட்டும் நன்றாக மசித்து கொள்ளவும். (கவனிக்க : மாங்காயினை மசிக்க கூடாது. )

  .  தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து பருப்புடன் சேர்க்கவும். 

  .  அத்துடன் வேகவைத்த மாங்காய் கத்திரிககயினை சேர்த்து 1 - 2 முறை கிளறிவிடவும்.(விரும்பினால் சிறிது சூடான தண்ணீர் சேர்த்து கொள்ளலாம். )


  .  சுவையான சத்தான மாங்காய் பருப்பு ரெடி.இதனை சாத்துடன் சிறிது நெய் சேர்த்து பிசைந்து சாப்பிட நன்றாக இருக்கும். இத்துடன் எதாவது வறுவல், ஊறுகாய் அல்லது அப்பளம் சேர்த்து சாப்பிடலாம்.3 comments:

Veena Theagarajan said...

mango and brinjal very good combo.. So comforting dhal

ரூபன் said...

வணக்கம்
செய்முறை விளக்கத்துடன் அசத்தல் சூப்பர்...
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Farin Ahmed said...

Lipsmacking spicy tangy pappu

Related Posts Plugin for WordPress, Blogger...