பெப்பர் ஈரல் வறுவல் - Chicken Liver Varuval Recipe - Pepper Liver Fry


print this page PRINT

இதில் கண்டிப்பாக Freshly Grounded Pepperயினை பயன்படுத்தினால் ரொம்ப நன்றாக கரமாக இருக்கும்.

அதே மாதிரி இஞ்சி பூண்டினை Paste மாதிரி அரைக்காமல் இஞ்சி பூண்டின் நசுக்கி சேர்த்தால் கூடுதல் சுவையுடன் இருக்கும்.

நான் இதில் ஈரலினை முதலில் வேகவைத்த பிறகு மசாலாவில் சேர்த்து இருக்கின்றேன். விரும்பினால் வேகவைக்காமல் அதனை அப்படியே மசாலாவில் சேர்த்து பிரட்டி வேகவிடலாம்.

இதில் தக்காளி சேர்க்க தேவையில்லை. அவரவர் காரத்திற்கு ஏற்ப மிளகு தூளினை சேர்க்கவும்.

நீங்களூம் செய்து பார்த்துவிட்டு உங்கள் அன்பான கருத்தினை தெரிவிக்கவும்...

சமைக்க தேவைப்படும் நேரம் : 20 - 30 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
  .  ஈரல் - 1/4 கிலோ
  .  வெங்காயம் - 2 
  .  பூண்டு - 10 பல் தோல் நீக்கியது
  .  இஞ்சி - 1 துண்டு
  .  கருவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு

சேர்க்க வேண்டிய தூள் வகைகள் :
  .  மஞ்சள் தூள் - 1/2 தே.கரண்டி + 1/2 தே.கரண்டி
  .  மிளகாய் தூள் - 1 தே.கரண்டி 
  .  உப்பு - தேவையான அளவு
-----------------------------------------------
  .  மிளகு தூள் - 2 தே.கரண்டி
  .  சோம்பு தூள் - 1/2 தே.கரண்டி

முதலில் தாளிக்க :
  .  எண்ணெய் - 1 மேஜை கரண்டி
  .  சோம்பு - 1/4 தே.கரண்டி


செய்முறை :
  .  ஈரலினை விரும்பிய அளவில் வெட்டி அதனை குறைந்தது 5 - 6 முறை தண்ணீரில் போட்டு நன்றாக சுத்தமாக அலசி கொள்ளவும். 

  .  ஈரலுடன் மஞ்சள் தூள் 1/2 தே.கரண்டி + 1 /2 தே.கரண்டி உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.

  .  இட்லி வேகவைப்பது போல , இந்த ஈரலினையும் இட்லி தட்டில் வைத்து 5 - 6 நிமிடங்கள் வேகவைத்து கொள்ளவும். (கவனிக்க : இந்த Step Optional தான். ஆனால் இப்படி செய்தால் ஈரல் மிகவும் பயங்கர Smell அடிக்காது. )


 . வெங்காயத்தினை நறுக்கி கொள்ளவும். இஞ்சி + பூண்டினை தட்டி வைக்கவும். (குறிப்பு : Ginger Garlic Pasteஆக செய்யாமல் இப்படி தட்டி செய்வது கூடுதல் சுவையினை தரும்.)


  .  கடாயில் எண்ணெய் ஊற்றி சோம்பு சேர்த்து தாளித்து அத்துடன் நசுக்கிய இஞ்சி பூண்டினை சேர்த்து வதக்கவும்.


 . இஞ்சி பூண்டு வதங்கிய பிறகு அத்துடன் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தினை போட்டு 2 நிமிடங்கள் வதக்கவும்.

  .  இத்துடன் மஞ்சள் தூள் + மிளகாய் தூள் + தேவையான அளவு உப்பு சேர்த்து மேலும் நன்றாக 7 - 8 நிமிடங்கள் வதக்கவும். 


  .  பிறகு அதில் கருவேப்பிலை + வேகவைத்த ஈரலினை சேர்த்து நன்றாக கலந்து மேலும் 2 - 3 நிமிடங்கள் வதக்கவும்.


  .  கடையில் மிளகு தூள் + சோம்பு தூள் சேர்த்து மேலும் 2 - 3 நிமிடங்கள் வேகவிட்டு பொடியாக நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து 1 முறை கிளறிவிடவும். 


  .  சுவையான மிகவும் சத்துள்ள ஈரல் வறுவல் ரெடி. இதனை அப்படியே சாத்துடன் பிசைந்து சாப்பிடலாம். சாம்பார், ரசம் கூட சாப்பிட நன்றாக இருக்கும்.


0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...