ராஜ்மா புளி அடை - Rajma Puli Adai Recipe - Red Kidney Beans Dosai - Healthy Dosai / Adai Recipes


print this page PRINT
ராஜ்மாவில் அதிக அளவு நார்சத்து (Both Soluble and Insoluble Fiber) இருப்பதால் Diabetics, Cholesterol அளவினை குறைக்க உதவுகின்றது.

அதே மாதிரி இதில் Protein,Copper,  Folate, Manganese, Iron, Potassium, Phosphorus, Magnesium , Vitamin B1 இருக்கின்றது.

இதனை அப்படியே அரைத்து தோசைகளாக சுடலாம். இதில் புளி சேர்ப்பதால் கூடுதல் சுவையுடன் இருக்கும்.

இதே மாதிரி எந்த பருப்பு வகைகளிலும் / அடை மாவு / தோசை மாவிலும் செய்யலாம். மிகவும் நன்றாக இருக்கும்.

நீங்களும் செய்து பார்த்துவிட்டு உங்கள் அன்பான கருத்தினை தெரிவிக்கவும்...

ஊறவைக்க தேவைப்படும் நேரம் : குறைந்தது 4 - 5 மணி நேரம்
சமைக்க தேவைப்படும் நேரம் : 10 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
  .  ஊறவைத்த ராஜ்மா - 2 கப்
  .  இட்லி அரிசி - 1/2 கப் (or) அரைத்த இட்லி மாவு - 1 கப்
  .  காய்ந்த மிளகாய் - 3- 4
  .  புளி - 1 சிறிய நெல்லிக்காய் அளவு
  .  உப்பு - தேவையான அளவு
  .  எண்ணெய் - சிறிதளவு


செய்முறை :
  .  ராஜ்மாவினை குறைந்தது 4 - 5 மணி நேரம் ஊறவைத்து கொள்ளவும். இட்லி அரிசியினையும் அதே மாதிரி ஊறவைத்து கொள்ளவும்.


  .  ராஜ்மா நன்றாக ஊறிய பிறகு அதனை தண்ணீர் வடித்து அத்துடன் காய்ந்த மிளகாய் + புளி சேர்த்து மைய அரைத்து கொள்ளவும்.


 . அரிசி + சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் போட்டு மைய அரைத்து வைக்கவும்.

  .  இரண்டு கலவையினையும் தேவையான அளவு உப்பு சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கலந்து வைக்கவும். (கவனிக்க : மாவினை புளிக்க வைக்க தேவையில்லை. அப்படியே தோசை சுடலாம். )


. தோசை கல்லினை சூடுபடுத்து கொள்ளவும். கல் நன்றாக சூடான பிறகு அதில் மாவினை ஊற்றி தோசைகளாக சுடலாம். (கவனிக்க : இது அடை மாதிரி ரொம்ப Thickஆக ஊற்ற தேவையில்லை. தோசை மாதிரியே மெல்லியதாக சுடலாம். )

. ஒரு பக்கம் நன்றாக வெந்த பிறகு அதனை திரும்பி போட்டு மேலும் வேகவிடவும்.


. சுவையான சத்தான அடை ரெடி. இதனை அப்படியே சாப்பிடலாம். விரும்பினால் சட்னி சேர்த்து சாப்பிடலாம்.


4 comments:

ரூபன் said...

வணக்கம்
செய்முறைவிளக்கத்தை வைத்துவீட்டில் செய்து பார்க்கிறோம் சுவையான உணவு பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Premalatha Aravindhan said...

Nice and yummy adai geetha,love this version...

Life with Spices said...

arumayaanaa recipe.. i will try tis for sure

Veena Theagarajan said...

Interesting adai bookmarked it..

Related Posts Plugin for WordPress, Blogger...