சிம்பிள் வேர்க்கடலை தம் பிரியாணி - Perfect Simple Peanut Dum Biryani - Basic Veg Dum Biryani Recipes


print this page PRINT
இந்த முறையில் பிரியாணி செய்தால், ஒவ்வொரு முறையும் சாதம் Perfect ஆக வெந்து பிரியாணி ரொம்ப சூப்பராக இருக்கும்.. (இந்த முறையில் செய்யும் பொழுது சாதம் அடிபிடித்து விடுமோ அல்லது தண்ணீர் அதிகம் / குறைவாக இருக்குமோ என்ற பயம் இருக்காது.)

கண்டிப்பாக அனைவரும் அவரவர் விருப்படி பிரியாணி மசாலாவினை செய்து  இந்த முறையில் அரிசியினை பிரியாணி மசாலாவுடன் சேர்த்து வேகவைத்து  செய்து பாருங்க... நன்றாக வரும்.

பொதுவாக நாம் எப்பொழுதும் பிரியாணிக்கு அரிசியினை குறைந்தது 10 - 20 நிமிடங்கள் ஊறவைப்போம். ஆனால் இந்த மாதிரி சமைக்கும் பொழுது Correct 1 மணி நேரம் ஊறவைக்க ( 60 Minutes) வேண்டும். அதிக நேரம் ஊறினாலும் கவலை இல்லை...

அதே மாதிரி இந்த  பிரியாணிக்கு தண்ணீர் வைக்கும் பொழுதும் 1 கப் அரிசிக்கு 2 கப் தண்ணீர் ஊற்ற வேண்டும். (கவனிக்க : தண்ணீரின் அளவினை குறைக்க தேவையில்லை. )அதே மாதிரி ஏற்கனவே பிரியாணி Gravyயில் தண்ணீர் இருந்தால் அதனையும் தண்ணீரில் அளவில் சேர்த்து கொள்ளவும்.

இப்பொழுது அரிசியினை பிரியாணிக்கு சேர்க்கும் விதத்தில் தான் அந்த Technique இருக்கின்றது. ஊறவைத்த அரிசியினை பிரியாணி மசாலாவின் மீது பரவலாக சேர்க்க வேண்டும். 
(அதாவது வேகவைத்த சாதத்தினை தம் பிரியாணிக்கு செய்வது மாதிரி இந்த முறையில் நாம் வெரும் ஊறவைத்த அரிசியினை மசாலாவுடன் சேர்த்து கிளறாமல் மேலே பரவிவிட வேண்டும். )

இரண்டாவதாக கவனிக்க வேண்டியது, தண்ணீரினை பரவலாக பரவி இருக்கும் அரிசியின் மீது மெதுவாக ஊற்ற வேண்டும். (அதாவது தண்ணீர் ஊற்றும் பொழுது அரிசி மசாலாவுடன் கலந்துவிட கூடாது. )

தண்ணீர் ஊற்றிய பிறகு தட்டு போட்டு மூடி அதனை பிரியாணியினை மிதமான தீயில் தண்ணீர் குறைந்தது, சாதம் சுமார் 75 - 80% வேகும் வரை வைக்கும் . இப்பொழுது அரிசி எல்லாம் வெந்து தண்ணீர் எல்லாம் இழுத்து கொண்டு இருக்கும். நாம் தட்டினை திறந்து பார்த்தால் தண்ணீர் குறைந்து இருக்கும்.

பிறகு தீயினை மிகவும் குறைந்த தீயில் வைத்து மேலும் 5 - 8  நிமிடங்கள் வேகவைத்து அடுப்பி நிறுத்திவிடவும் அப்படியே 5 நிமிடங்கள் விடவும்.

பிறகு தட்டினை திறந்து மெதுவாக அனைத்து சேர்ந்த மாதிரி ஒரே ஒரு முறை கிளறிவிட்டு தட்டு போட்டு 2 நிமிடங்கள் மூடிவிடவும். இப்பொழுது பிரியாணி சூப்பராக இருக்கும். 

நான் பிரியாணிக்கு பயன்படுத்தி இருப்பது Premium India Gate Basmati Rice. நீங்கள் எந்த Brand அரிசியினையும் பயன்படுத்தலாம். இதே மாதிரி அரிசி Perfectஆக வேகும்.

சரி...இப்பொழுது பிரியாணி செய்முறையினை பார்ப்போம்...நீங்களும் செய்து பார்த்துவிட்டு உங்கள் அன்பான கருத்தினை தெரிவிக்கவும்...

சமைக்க தேவைப்படும் நேரம் : 30 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
  .  வேகவைத்த வேர்க்கடலை - 1 கப்
  .  பாஸ்மதி அரிசி - 2 கப்
  .  தயிர் - 1/2 கப்
  .  வெங்காயம் - 1 பெரியது (நீளமாக வெட்டி கொள்ளவும்)
  .  தக்காளி - 1 , பச்சை மிளகாய் - 2
  .  இஞ்சி பூண்டு விழுது - 1 மேஜை கரண்டி
  .  புதினா, கொத்தமல்லி - 1 கைபிடி அளவு
  .  எலுமிச்சை சாறு - 1 மேஜை கரண்டி
  .  முந்திரி பருப்பு - 10 - 12 (விரும்பினால்)

சேர்க்க வேண்டிய தூள் வகைகள் :
  .  மஞ்சள் தூள் - 1/2 தே.கரண்டி
  .  மிளகாய் தூள் - 1/2 தே.கரண்டி
  .  பிரியாணி மசாலா - 1/2 தே.கரண்டி
  .  உப்பு - தேவையான அளவு

தாளிக்க :
  .  எண்ணெய் + நெய் - 1 மேஜை கரண்டி
  .  பட்டை - 1 , கிராம்பு - 2, பிரியாணி இலை - 1

செய்முறை :
  .  1 கப் வேர்க்கடலையினை சுமார் 3 - 4 மணி நேரம் ஊறவைத்து கொண்டு அதனை பிரஸர் குக்கரில் போட்டு 4 - 5 விசில் வரும் வரை வேகவைத்து கொள்ளவும்.

  .  அரிசியினை 1 மணி நேரம் ஊறவைத்து கொள்ளவும்.தக்காளி +  வெங்காயத்தினை நீளமாக வெட்டிவைக்கவும். பச்சைமிளகாயினை இரண்டாக கீறிகொள்ளவும். புதினா, கொத்தமல்லியினை பொடியாக நறுக்கவும்.

   .  பாத்திரத்தில் எண்ணெய் + நெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்கள் +  தூள் வகைகள் சேர்த்து தாளித்து கொள்ளவும்.

  .  பிறகு வெங்காயம் சேர்த்து வதக்கி கொள்ளவும்.


  .  வெங்காயம் சிறிது வதங்கியதும் இத்துடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கவும்.

  .   இஞ்சி பூண்டு விழுது சிறிது வதங்கியதும் அத்துடன் தக்காளி சேர்த்து வதக்கவும்.


  .  இத்துடன் வேகவைத்த வேர்க்கடலை + முந்திரி + கொத்தமல்லி + புதினா  சேர்த்து நன்றாக கலந்து 1 - 2 நிமிடங்கள் வேகவிடவும். 


  .  பிறகு அரிசியினை தண்ணீர் இல்லாமல் அதன் மீது பரவலாக பரவி விடவும். (கவனிக்க : அரிசியினை சேர்பதற்கு முன்பாக பிரியாணிக்கு தேவையான அளவு உப்பு இருக்கின்றது என்பதினை கண்டிப்பாக சரி பார்த்து கொள்ளவும். )


  .  1 கப் அரிசிக்கு 2 கப் தண்ணீர் என்ற அளவில் அரிசியின் மீது தண்ணீர் மசாலாவுடன் கலக்காத மாதிரி ஊற்றிவிடவும். அத்துடன் எலுமிச்சை சாறு சேர்க்கவும்.

  .  இதனை மிதமான தீயில் தட்டு போட்டு மூடி பிரியாணியில் தண்ணீர் 80 %- 90%  வற்றும் வரை வேகவிடவும். இப்பொழுது சாதமும் சுமார் 75-80% வெந்து இருக்கும்.


  .  பிறகு  மிகவும் குறைந்த தீயில் அடுப்பினை வைத்து மேலும் 5 - 8 நிமிடங்கள் வைத்து அடுப்பினை நிறுத்தி அப்படியே 5 நிமிடங்கள் வைக்கவும். 

.  அதன் பின்னர் தட்டினை திறந்து அதனை ஒரு முறை மெதுவாக  கிளறிவிடவும். 


   .  சுவையான சத்தான பிரியாணி ரெடி. இதனை ராய்தா, உருளை வறுவல், சிப்ஸ் போன்றவையுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.கவனிக்க :
இதனை எந்த பாத்திரத்திலும் அதற்கு ஏற்ற தட்டு போட்டு மூடிசெய்யலாம்.  

இதில் எலுமிச்சை சாறுக்கு பதிலாக Amchoor powder சேர்த்தால் கூடுதல் சுவையாக இருக்கும்.

அதே மாதிரி பிரியாணி மசாலாவிற்கு பதிலாக கரம் மசாலா சேர்த்து கொள்ளலாம்.

காரத்திற்கு மிளகாய் தூள் பதில் பச்சைமிளகாயினை கூடுதலாக சேர்த்து கொள்ளலாம்.

அதே மாதிரி வெரும் வேர்க்கடலை மட்டும் சேர்க்காமல் அத்துடன் 2 - 3 விதமான சுண்டலினை சேர்த்து செய்தாலும் நன்றாக இருக்கும்.


நெல்லிக்காய் ஜாமூன் - Nellikai Jamun Recipe - Amla Jamun - No cook Recipe


print this page PRINT
எளிதில் செய்ய கூடிய சத்தான ஜாமூன் . வெரும் 2 பொருட்கள் வைத்து செய்ய கூடிய No cook Recipe இது.

இதில் Main Ingredients - நெல்லிக்காய் + வெல்லம். 

நெல்லிக்காயில் அதிக அளவு Vitamin C அடங்கியுள்ளது.  அத்துடன் வெல்லம் சேர்ப்பதால், உடலில் Iron குறைவாக இருப்பவர்கள் இதனை தினமும் 1 நெல்லிக்காய் சாப்பிட்டால் Iron அளவு அதிகரிக்கும்.

வெல்லத்திற்கு பதிலாக Brown Sugar / Coconut Sugar கூட பயன்படுத்தலாம். 

நான் சுமார் 3 வாரம் தான் இதனை வைத்தேன். அதனால் கரைந்த வெல்லம் நன்றாக வற்றவில்லை. அதே மாதிரி இங்கே இன்னமும் Climate மிகவும் Coldஆகவே இருக்கின்றது. வெப்பம் அதிகம் இருந்தால் சீக்கிரமாக வெல்லம் கரைந்து வற்ற ஆரம்பிக்கும். 

நீங்களூம் செய்து பார்த்துவிட்டு உங்கள் அன்பான கருத்தினை தெரிவிக்கவும்.  
செய்ய தேவைப்படும் நேரம் : குறைந்தது 1 மாதம்
தேவையான பொருட்கள் :
  .  நெல்லிக்காய் - 10
  .  பொடித்த வெல்லம் / Brown Sugar/Coconut Sugar - 1 கப்


செய்முறை :
  .  நெல்லிக்காயினை நன்றாக கழுவி கொள்ளவும்.

 .  ஒரு கண்ணாடி பாட்டில் / மண் பானையில் முதலில் சிறிது பொடித்த வெல்லத்தினை அடியில் போடவும்.


  .  அதன் மீது 3 - 4 நெல்லிக்காயினை வைக்கவும்.

  .  திரும்பவும் அதன் மீது சிறிது துறுவிய வெல்லத்தினை சேர்க்கவும். 


  .  பிறகு நெல்லிக்காய் வைத்து அதன் மீது வெல்லதினை தூவிவிடவும்.

 .  கடைசி Layerயில் வெல்லம் இருக்க வேண்டும். இந்த பாட்டிலினை அப்படியே துணியினை வைத்து மூடிவிடவும். (நான் அப்படியே மூடியினை வைத்து சிறிது looseஆக மூடிவிட்டேன். )


  .  இதனை அப்படியே Cool & Dry Placeயில் வெளியில் வைத்துவிடவும். (நான் Kitchenயிலேயே வைத்து விட்டேன். )

 .  1 வாரம் கழித்து பார்த்தால் வெல்லம் கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து இருக்கும். 

 .  2 - 3 வாரம் கழித்து பார்த்தாம் வெல்லம் முழுவதமாக கரைந்து தண்ணீர் மாதிரி ஆகி குறைய ஆரம்பிக்கும்.


 .  தண்ணீரின் அளவு குறைய ஆரம்பிக்கும். சுமார் 30 - 40 நாள் கழித்து பார்த்தால் தண்ணீர் எல்லாம் வற்றி ஜாமூன் மாதிரி இருக்கும்.

 .  சுவையான சத்தான் நெல்லிக்காய் ஜாமூன் ரெடி. இதனை தினமும் 1 சாப்பிட்டால் உடலிற்கு மிகவும் நல்லது.


குறிப்பு ;

வெல்லம் அனைத்து வற்ற குறைந்தது 1 மாதத்திற்கும் மேலாக எடுக்கும். 

அதே மாதிரி Climateயினை பொருத்தும் தண்ணீர் வற்ற நேரம் எடுக்கும்.
Linking this post to "Friendship 5 series" started by Geetha Achal & Savitha...


வேப்பிலைக்கட்டி - Veppilai Katti Recipe - Narthailai Podi / Citron Leaves Podi - No cook Recipe


print this page PRINT
வேப்பிலைக்கட்டி என்றவுடன் இது வேப்பிலை வைத்து செய்தது என்று நினைத்துவிட வேண்டாம்.

இது எலுமிச்சை இலை + நார்தங்காய் இலை சேர்த்து செய்யும் பொடி. எலுமிச்சை / நார்தங்காய் இலை எதாவது ஒன்று இருந்தால் கூட இந்த பொடியினை செய்யலாம். 

இதில் கண்டிப்பாக ஓமம் சேர்க்க வேண்டும். அதே மாதிரி இதில் புளி சேர்ப்பதற்கு பதிலாக எலுமிச்சை சாறு கூட சேர்க்கலாம்.

அவரவர் காரத்திற்கு ஏற்ப காய்ந்த மிளகாயினை சேர்க்கவும். கொடுத்துள்ள அளவு சேர்த்தால் சரியாக இருக்கும்.

இந்த பொடியினை Fridgeயில் வைத்தால் 1 மாதம் வரை பயன்படுத்தலாம். இது தயிர் சாதத்திற்கு சூப்பர் காம்பினேஷன்..

எளிதில் செய்ய கூடிய சத்தான பொடி- No cook Recipe.  நீங்களூம் செய்து பார்த்துவிட்டு உங்கள் அன்பான கருத்தினை தெரிவிக்கவும்...

இலைகளை கழுவி உலர வைக்க: 15 - 30 நிமிடங்கள்
பொடி செய்ய தேவைப்படும் நேரம் : 5 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
  .  எலுமிச்சை இலை - 1 கப்
  .   நார்தங்காய் இலை - 2 கப்
  .  கருவேப்பிலை இலை - 1 கப்
  .  காய்ந்த மிளகாய் - சுமார் 15 - 16
  .  ஓமம் - 2 மேஜை கரண்டி
  .  பெருங்காயம் - 1/2 தே.கரண்டி
  .  புளி - பெரிய நெல்லிக்காய் அளவு
  .  உப்பு - தேவையான அளவு


செய்முறை :
  .  நார்தங்காய் இலையினை சுத்தம் செய்து அதனை நன்றாக கழுவி உலர்ந்த துணியில் ஈரம் போக நிழலில் காய வைக்கவும்.


 . அதே மாதிரி கருவேப்பிலை இலையினையும் கழுவி காயவைத்து கொள்ளவும்.


  .  ஓமம் + பெருங்காயம் + தேவையான அளவு உப்பு + காய்ந்த மிளகாயினை மிக்ஸியில் போட்டு பொடித்து தனியாக வைக்கவும்.


  .  அதன்பிறகு காயவைத்த இலைகள் + புளி சேர்த்து நன்றாக மைய பொடித்து கொள்ளவும். (தண்ணீர் சேர்க்க கூடாது. )


  . இலைகள் நன்றாக அரைத்த பிறகு அத்துடன் பொடித்த பொடியினை சேர்த்து மேலும் சிறிது நேரம் அரைக்கவும்.


 .  கடைசியில் , விரும்பினால் அதனை சிறிய உருண்டைகளாக உருட்டி வைக்கவும். 

  .  சுவையான வேப்பிலைக்கட்டி ரெடி. இதனை தயிர் சாதத்துடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.


குறிப்பு:
இந்த பொடியினை சிறிது இட்லி மாவுடன் சேர்த்து இட்லி / தோசை சுட்டால் வித்தியசமாக நன்றாக இருக்கும்.

அதே மாதிரி ராய்தா செய்யும் பொழுது, தயிருடன் 1 தே.கரண்டி பொடியினை சேர்த்தால் சூப்பரான ராய்தா ரெடி. இதனை Grilled செய்த உணவுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.


Linking this post to "Friendship 5 series" started by Geetha Achal & Savitha...


நேச்சுரல் ரோஸ் மில்க் - Natural Rosemilk Recipe - No cook Recipe


print this page PRINT
இது எளிதில் செய்ய கூடிய சத்தான Drink - No cook Recipe . 

இதில் தேங்காய் + Beetroot சேர்த்து அரைப்பதால்  Rosemilk கலர் வரும்.

தேங்காயினை அப்படியே அரைத்து தேங்காய் பாலினை குடிப்பது உடலிற்கு மிகவும் நல்லது. தேங்காய் பாலினை சூடுபடுத்தி தான் சாப்பிட கூடாது. 

நான் தேங்காய் + பீட்ரூடினையினை சேர்த்து அரைத்து இருக்கின்றேன். விரும்பினால் தேங்காய் மற்றும் பீட்ரூடினை தனி தனியாக அரைத்து அவரவர் விருப்பதிற்கு ஏற்றவாறு கலந்து கொள்ளலாம்.

இதில் நான் சக்கரை + ஏலக்காய் சேர்த்து இருக்கின்றேன். விரும்பினால் சேர்த்து கொள்ளவும். 

நீங்களும் செய்து பார்த்துவிட்டு உங்கள் அன்பான கருத்தினை தெரிவிக்கவும்...

செய்ய தேவைப்படும் நேரம் : 5 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
  .  நறுக்கிய தேங்காய் - 1 கப்
  .  நறுக்கிய பீட்ரூட் - 1/2 கப்
  .  சக்கரை - 1 மேஜை கரண்டி (விரும்பினால் )
  .  ஏலக்காய் - 1 - 2


செய்முறை :
  .  தேங்காய் + பீட்ரூடினை சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

  .  மிக்ஸியில் தேங்காய் + பீட்ரூட் சேர்த்து கொர கொரப்பாக அரைக்கவும். 


  .  அத்துடன் 1 கப் தண்ணீர் சேர்த்து மேலும் மைய அரைக்கவும்.

  .  இத்துடன் சக்கரை + ஏலக்காய் சேர்த்து மேலும் 1 நிமிடம் அரைக்கவும்.


  .  இதில் 2 கப் தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளவும்.

  .  வடிகட்டில் அரைத்த கலவையில் வடித்து கொள்ளவும்.


 . இதனை Fridgeயில் வைத்து Coolஆக குடிக்கலாம். விரும்பினால் Room Temperatureயில்  வைத்தும் குடிக்கலாம்.

  .  சுவையான சத்தான Rosemilk ரெடி.
Linking this post to "Friendship 5 series" started by Geetha Achal & Savitha...

தேனும் தினையும் - Thenum Thinaiyum - Thinai Urundai - No Cook Recipe - Millet Recipe


எளிதில் செய்ய கூடிய சத்தான உருண்டை. இது No Cook Recipe. இதில் தினையினை கழுவி காயவைத்து அரைப்பதால் மிகவும் நன்றாக இருக்கும்.

கண்டிப்பாக தினையில் கல் இல்லாமல் பார்த்து கொள்ளவும். அதனால் கண்டிப்பாக கழுவி கொள்ளவும்.

இதில் வெல்லம் சேர்த்து இருக்கின்றேன். சில சமயம் வெல்லத்திலும் கல் இருக்கும். விரும்பினால் அதற்கு பதிலாக Brown Sugar / Coconut Sugar என்று பயன்படுத்தலாம்.

நீங்களும் செய்து பார்த்துவிட்டு உங்கள் அன்பான கருத்தினை தெரிவிக்கவும்..

ஊறவைத்து காய வைக்க : 15 - 20 நிமிடங்கள்
செய்ய தேவைப்படும் நேரம் : 5 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
  .  தினை - 1 கப்
  .  துறுவிய வெல்லம் - 1/2 கப்
  .  தேன் - 2 மேஜை கரண்டி
  .  நெய் - 2 மேஜை கரண்டி
  .  ஏலக்காய் - 1  (விரும்பினால் சேர்க்கவும்)


செய்முறை :
  .  தினையினை தண்ணீரில் 2 - 3 முறை கழுவி அதில் கல் எதுவும் இல்லாமல் பார்த்து ஒரு உலர்ந்த டவலில் தண்ணீர் வடித்து காய வைத்து கொள்ளவும்.


  .  தினையினை அப்படியே சுமார் 15 - 20 நிமிடங்கள் காயவைத்து கொள்ளவும். (நன்றாக காய வேண்டும் என்று அவசியம் இல்லை. அதனால் நிழலிலேயே காய வைக்கவும். )


  .  காயவத்த தினையினை மிக்ஸியில் போட்டு மைய பொடித்து கொள்ளவும். மாவு நன்றாக இருக்கும்.

  .  தனியாக மிக்ஸியில் வெல்லம் + ஏலக்காய் சேர்த்து பொடிக்கவும்.


  .  அரைத்த தினை மாவு + பொடித்த வெல்லம் + தேன் + நெய் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.


  .  இதனை சிறிய சிறிய உருண்டைகளாக பிடித்து வைக்கவும். (உருண்டை பிடிக்க முடியவில்லை என்றால் மேலும் சிறிது நெய் சேர்க்கவும். )


  .  சுவையான சத்தான தினை உருண்டை ரெடி.


Linking this post to "Friendship 5 series" started by Geetha Achal & Savitha...


Related Posts Plugin for WordPress, Blogger...