வேப்பிலைக்கட்டி - Veppilai Katti Recipe - Narthailai Podi / Citron Leaves Podi - No cook Recipe


print this page PRINT
வேப்பிலைக்கட்டி என்றவுடன் இது வேப்பிலை வைத்து செய்தது என்று நினைத்துவிட வேண்டாம்.

இது எலுமிச்சை இலை + நார்தங்காய் இலை சேர்த்து செய்யும் பொடி. எலுமிச்சை / நார்தங்காய் இலை எதாவது ஒன்று இருந்தால் கூட இந்த பொடியினை செய்யலாம். 

இதில் கண்டிப்பாக ஓமம் சேர்க்க வேண்டும். அதே மாதிரி இதில் புளி சேர்ப்பதற்கு பதிலாக எலுமிச்சை சாறு கூட சேர்க்கலாம்.

அவரவர் காரத்திற்கு ஏற்ப காய்ந்த மிளகாயினை சேர்க்கவும். கொடுத்துள்ள அளவு சேர்த்தால் சரியாக இருக்கும்.

இந்த பொடியினை Fridgeயில் வைத்தால் 1 மாதம் வரை பயன்படுத்தலாம். இது தயிர் சாதத்திற்கு சூப்பர் காம்பினேஷன்..

எளிதில் செய்ய கூடிய சத்தான பொடி- No cook Recipe.  நீங்களூம் செய்து பார்த்துவிட்டு உங்கள் அன்பான கருத்தினை தெரிவிக்கவும்...

இலைகளை கழுவி உலர வைக்க: 15 - 30 நிமிடங்கள்
பொடி செய்ய தேவைப்படும் நேரம் : 5 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
  .  எலுமிச்சை இலை - 1 கப்
  .   நார்தங்காய் இலை - 2 கப்
  .  கருவேப்பிலை இலை - 1 கப்
  .  காய்ந்த மிளகாய் - சுமார் 15 - 16
  .  ஓமம் - 2 மேஜை கரண்டி
  .  பெருங்காயம் - 1/2 தே.கரண்டி
  .  புளி - பெரிய நெல்லிக்காய் அளவு
  .  உப்பு - தேவையான அளவு


செய்முறை :
  .  நார்தங்காய் இலையினை சுத்தம் செய்து அதனை நன்றாக கழுவி உலர்ந்த துணியில் ஈரம் போக நிழலில் காய வைக்கவும்.


 . அதே மாதிரி கருவேப்பிலை இலையினையும் கழுவி காயவைத்து கொள்ளவும்.


  .  ஓமம் + பெருங்காயம் + தேவையான அளவு உப்பு + காய்ந்த மிளகாயினை மிக்ஸியில் போட்டு பொடித்து தனியாக வைக்கவும்.


  .  அதன்பிறகு காயவைத்த இலைகள் + புளி சேர்த்து நன்றாக மைய பொடித்து கொள்ளவும். (தண்ணீர் சேர்க்க கூடாது. )


  . இலைகள் நன்றாக அரைத்த பிறகு அத்துடன் பொடித்த பொடியினை சேர்த்து மேலும் சிறிது நேரம் அரைக்கவும்.


 .  கடைசியில் , விரும்பினால் அதனை சிறிய உருண்டைகளாக உருட்டி வைக்கவும். 

  .  சுவையான வேப்பிலைக்கட்டி ரெடி. இதனை தயிர் சாதத்துடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.


குறிப்பு:
இந்த பொடியினை சிறிது இட்லி மாவுடன் சேர்த்து இட்லி / தோசை சுட்டால் வித்தியசமாக நன்றாக இருக்கும்.

அதே மாதிரி ராய்தா செய்யும் பொழுது, தயிருடன் 1 தே.கரண்டி பொடியினை சேர்த்தால் சூப்பரான ராய்தா ரெடி. இதனை Grilled செய்த உணவுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.


Linking this post to "Friendship 5 series" started by Geetha Achal & Savitha...


3 comments:

சாருஸ்ரீராஜ் said...

wov geetha intresting recepie

nandoos Kitchen said...

nice and healthy..

ரூபன் said...

வணக்கம்

செய்முறை விளக்கத்துடன் சிறப்பான விளக்கம் கண்டு மகிழ்ந்தேன்.. செய்து பார்க்கிறோம்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Related Posts Plugin for WordPress, Blogger...