மாப்பிள்ளை குருமா / சொதி - Mappillai Kurma Recipe - Sodhi Recipe - Chicken Kurma Recipe
இதில் மிளகாய் தூள் சேர்க்க தேவையில்லை.காரத்திற்கு வெரும் பச்சைமிளகாய் மட்டுமே சேர்க்க வேண்டும்.
இதில் கரம் மசாலாவும் சேர்க்க கூடாது. அதே மாதிரி தாளிக்க பட்டை + சோம்பு மட்டும் தான் சேர்க்க வேண்டும்.
அதே மாதிரி, இதில் கடைசியாக கண்டிப்பாக தயிர் சேர்க்க வேண்டும். தயிர் சேர்ப்பதால் வித்தியசமாக கூடுதல் சுவையுடன் இருக்கும். தயிருக்கு பதிலாக விரும்பினால் எலுமிச்சை சாறு சேர்க்கலாம். ஆனால் சுவையில் வித்தியசாம இருக்கும்.
நான் இதனை சிக்கனில் செய்து இருக்கின்றேன். விரும்பினால் இதே மாதிரி காய்கள் / மட்டன் சேர்த்து செய்யலாம். மட்டனில் செய்வதாக இருந்தால் முதலில் மட்டனை வேகவைத்து சேர்க்கவும்.
ஊர்பக்கம் இந்த குருமாவினை மருவீட்டின் பொழுது மாப்பிள்ளையிற்கு செய்து கொடுப்பாங்களாம் ... நன்றி சவிதா....
நீங்களூம் செய்து பார்த்துவிட்டு உங்கள் அன்பான கருத்தினை தெரிவிக்கவும்...
சமைக்க தேவைப்படும் நேரம் : 30 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
. சிக்கன் - 1/2 கிலோ
. தயிர் - 1/4 கப்
. கொத்தமல்லி, கருவேப்பிலை - சிறிதளவு
. எண்ணெய் - 1 மேஜை கரண்டி
பொடியாக நறுக்கி கொள்ள :
. வெங்காயம் - 1 பெரியது
. தக்காளி - 1
. பச்சை மிளகாய் - 5
சேர்க்க வேண்டிய தூள் வகை :
. மஞ்சள் தூள் - 1/2 தே.கரண்டி
. தனியா தூள் - 1 தே.கரண்டி
. உப்பு - தேவையான அளவு
நசுக்கி கொள்ள :
. பூண்டு - 5 பல் தோல் நீக்கியது
. பட்டை - 1 இன்ச் துண்டு
. சோம்பு - 1/2 தே.கரண்டி
வறுத்து அரைக்க :
. தேங்காய் துண்டுகள் - 2 துண்டுகள் நறுக்கியது
. இஞ்சி - 1 துண்டு
. பச்சை மிளகாய் - 3- 4
. கசாகசா - 1 தே.கரண்டி
. பொட்டுக்கடலை - 1 மேஜை கரண்டி
செய்முறை :
. வெங்காயம் + தக்காளியினை நறுக்கி வைக்கவும். பச்சைமிளகாயினை இரண்டாக வெட்டி கொள்ளவும். சிக்கனை சுத்தம் செய்து நன்றாக கழுவி கொள்ளவும்.
. நசுக்கி கொள்ள கொடுத்துள்ள பொருட்களை, பூண்டு + பட்டை + சோம்பு சேர்த்து நசுக்கி வைக்கவும்.
. அதே மாதிரி, வறுத்து அரைக்க கொடுத்துள்ள பொருட்களில், தேங்காய் + இஞ்சி + பச்சைமிளகாய் + கசாகசா சேர்த்து வறுத்து கொள்ளவும்.
. வறுத்த பொருட்கள் + பொட்டுக்கடலையுடன் சிறிது தண்ணீர் சேர்த்து மைய அரைத்து வைக்கவும்.
. பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் நசுக்கி வைத்து இருக்கும் பூண்டு கலவையினை போட்டு வதக்கவும்,
. அதன் பிறகு, அதில் வெங்காயம் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.
. வெங்காயம் வதங்கிய பிறகு அதில், தக்காளி + பச்சை மிளகாய் சேர்த்து மேலும் 2 - 3 நிமிடங்கள் வதக்கவும்.
. தக்காளி வதங்கியவுடன், அதில் சேர்க்க கொடுத்துள்ள தூள் வகைகள் சேர்க்கவும்.
. அத்துடன் சிக்கன் துண்டுகளையும் சேர்த்து நன்றாக கலந்து 1 - 2 நிமிடங்கள் வேகவிடவும்.
. பிறகு அதில் அரைத்த தேங்காய் விழுது + 2 கப் தண்ணீர் சேர்த்து நன்றாக வேகவிடவும்.
. தயிரினை மிக்ஸியில் போட்டு 3 - 4 முறை அடித்து கொள்ளவும். (இப்படி செய்வதால் தயிர் சேர்க்கும் பொழுது திரிந்த மாதிரி இருக்காது. )
. சுமார் 10 - 15 நிமிடங்கள் கழித்து சிக்கன் 90% வெந்த பிறகு, தயிரினை சேர்த்து மேலும் சிறிது நேரம் கொதிக்கவிடவும்.
. கடைசியில் கருவேப்பிலை + கொத்தமல்லி தூவிவிடவும்.
. சுவையான மாப்பிள்ளை குருமா ரெடி. இதனை சாதம், இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.
பூண்டு தக்காளி சட்னி - Poondu Thakkali Chutney Recipe - Garlic Tomato Chutney - Sidedish for Idli / Dosai
தேவையான பொருட்கள் :
. பூண்டு - 15 - 20 பல் தோல் நீக்கியது
. தக்காளி - 1 பெரியது
. காய்ந்த மிளகாய் - 8 - 10
. புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
. உப்பு - தேவையான அளவு
தாளிக்க :
. எண்ணெய் - 2 மேஜை கரண்டி
. கடுகு, உளுத்தம் பருப்பு - தாளிக்க
. கருவேப்பிலை - 5 இலை
செய்முறை :
. பூண்டியினை தோல் நீக்கி வைத்து கொள்ளவும். தக்காளியினை பெரிய துண்டுகளாக வெட்டி வைக்கவும்.
. மிக்ஸியில் முதலில் காய்ந்த மிளகாயினை போட்டு பொடித்து கொள்ளவும்.
. இத்துடன் பூண்டு + புளியினை சேர்த்து அரைத்து கொள்ளவும்.
. பிறகு, அதில் நறுக்கிய தக்காளியினை சேர்த்து மேலும் அரைத்து கொள்ளவும்.
. கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு + உளூத்தம்பருப்பு + கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
. அதில் அரைத்த விழுது + 1/4 Cup தண்ணீர் + தேவையான அளவு உப்பு சேர்த்து 5 - 6 நிமிடங்கள் வேகவிடவும்.
. சுவையான பூண்டு சட்னி ரெடி. இதனை இட்லி/ தோசையுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.
தினை அரிசி இட்லி & தோசை - Thinai Arisi Idli & Dosai Recipe - Millet Breakfast Ideas
Posted by
GEETHA ACHAL
at
Thursday, May 07, 2015
Labels:
Friendship 5 Series,
Millet - சிறுதானியம்,
இட்லி - Idly,
தோசை-Dosai

எளிதில் செய்ய கூடிய சத்தான சுவையான இட்லி.
நான் எப்பொழுதும் அரிசி : உளுத்தமபருப்புக்கு 1: 3 Ratioவில் தான் மிக்ஸியில் அரைப்பேன். Grinderயில் அரைப்பதாக இருந்தால் , அரிசி : உளுத்தமபருப்புக்கு 1: 4 Ratioவில் அரைக்கலாம்.
அதனால் தான் தினை - 2 கப் , இட்லி அரிசி - 1 கப் என்றால் 3 கப் வரும். Grinderயில் அரைப்பதாக இருந்தால் தினை - 3 கப் , இட்லி அரிசி - 1 கப் என்ற அளவில் எடுத்து கொள்ளவும்.
இந்த இட்லி வெள்ளை கலரில் இல்லாமல் சிறிது பழுப்பு நிறத்தில் தான் இருக்கும். அது தினையின் தன்மையினை பொருத்தது. ஆனால் சுவை சூப்பராக இருக்கும்.
USயில் இருக்கின்றவங்க, தினையிற்கு, Bob's Red Milletயினை வாங்கி இதே மாதிரி செய்து பார்க்கலாம்.
எப்பொழுதும் இட்லி மாவினை, புளித்த பிறகு 1 - 2 முறை கரண்டியினை வைத்து கலக்கினால் போதும். அதிகம் கலக்க வேண்டாம்.
நீங்களூம் செய்து பார்த்துவிட்டு உங்கள் அன்பான கருத்தினை தெரிவிக்கவும்.
தினை ஊறவைக்க : 2 - 3 மணி நேரம்
மாவு புளிக்க வைக்க : குறைந்தது 6 மணி நேரம்
தேவையான பொருட்கள் :
. தினை / Thinai Arisi - 2 கப்
. இட்லி அரிசி - 1 கப்
. உளுத்தம்பருப்பு - 1 கப்
. வெந்தயம் - 1/4 தே.கரண்டி
. உப்பு - 1 தே.கரண்டி
செய்முறை :
. தினை + இட்லி அரிசி + உளுத்தம்பருப்பு, வெந்தயம் அனைத்தும் நன்றாக கழுவி தேவையான அளவு தண்ணீர் சேர்த்து குறைந்தது 2 - 3 மணி நேரம் ஊறவைத்து கொள்ளவும்.
. மிக்ஸியில் முதலில் ஊறவைத்த உளுத்தம்பருப்பு, வெந்தயத்தினை + சிறிது தண்ணீர் சேர்த்து மைய அரைத்து கொள்ளவும்.
. அதன்பிறகு, அதில் தினை + இட்லி அரிசி + சிறிது தண்ணீர் சேர்த்து மைய அரைக்கவும்.
. அரைத்த இரண்டு மாவினையும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கரைத்து கொள்ளவும்.
. மாவினை அப்படியே தட்டு போட்டு மூடி சுமார் 6 - 8 Hours, புளிக்கவிடவும். (முதல் நாள் இரவு / மாலையில் மாவு அரைத்தால், மறுநாள் காலையில் இட்லி செய்யலாம். )
. புளித்த மாவு இப்பொழுது பொங்கிவந்து இருக்கும். அதனை கரண்டி வைத்து 1 - 2 முறை மட்டும் கலந்துவிடவும்.
. இட்லி தட்டில் மாவினை ஊற்றி, இட்லி வேகவைக்கும் பாத்திரத்தில் வைத்து 8 - 10 நிமிடங்கள் வேகவிடவும்.
. இதே மாதிரி தோசை கல்லினை காயவைத்து, தோசைகளை சுடவும்.
. சுவையான சத்தான இட்லி, தோசை ரெடி. இத்துடன் தக்காளி சட்னி, சாம்பார் போன்றவையுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.
Linking this post to "Friendship 5 series" started by Geetha Achal & Savitha...
தர்பூசணி ஜூஸ் - Watermelon Juice Recipe - Summer Special

தர்பூசணியில் அதிக அளவு Vitamin C & Vitamin A இருக்கின்றது. அதே மாதிரி அதில் Potassium , Copper, Biotin & Magnesium இருக்கின்றது.
தர்பூசணியினை துண்டுகளாக வெட்டும் பொழுது அதனை ரொம்பவும் வெட்டாமல் அதனுடைய வெள்ளை பகுதியினையும் சேர்த்து கொள்ளவும்.
ஜூஸ் செய்ய எப்பொழுதும் குளிர்ந்த தண்ணீர் Cold Water / Ice Cubes சேர்த்து கொண்டால் சூப்பராக இருக்கும்.
நீங்களூம் செய்து பார்த்துவிட்டு உங்கள் அன்பான கருத்தினை தெரிவிக்கவும்.
ஜூஸ் செய்ய தேவைப்படும் நேரம் : 5 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
. தர்பூசணி துண்டுகள் - 3 கப்
. சக்கரை - 1 - 2 மேஜை கரண்டி
. எலுமிச்சை சாறு - 1 தே.கரண்டி (விரும்பினால்)
செய்முறை :
. தர்பூசணியினை சிறிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும். (விரும்பினால் வெள்ளை பகுதியினையும் சேர்த்து கொள்ளலாம். )
. தர்பூசணி துண்டுகள் + சக்கரை + எலுமிச்சை சாறு சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும். விரும்பினால் 1 கப் தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளவும்.
. இப்பொழுது சுவையான சத்தான ஜூஸ் ரெடி.
Linking this post to "Friendship 5 series" started by Geetha Achal & Savitha...
பகோடா வத்தல் - Pakoda Vathal Recipe - Vadam Recipe - Summer Special Recipes
Posted by
GEETHA ACHAL
at
Tuesday, May 05, 2015
Labels:
Friendship 5 Series,
எப்படி செய்வது - How to Make It?

இந்த வத்தல் போடும் பொழுது கவனிக்க வேண்டிய சில டிப்ஸ் ,
இதில் அரிசி மாவு வைத்து செய்து இருக்கின்றேன். எப்பொழுதும் 1 கப் அரிசி மாவிற்கு 4 கப் தண்ணீர் என்ற Ratioவில் ( 1 : 4) சேர்த்து கொள்ளவும்.
மாவு கரைக்க பொழுது 1 கப் அரிசி மாவிற்கு 1 கப் தண்ணீர் தனியாக எடுத்து கொள்ளவும். அப்படி பார்த்தால் மொத்தமாக 1 கப் அரிசி மாவுக்கு 5 கப் தண்ணீர் வரும்.
எப்பொழுது வத்தல் போடும் பொழுது உப்பினை சிறிது குறைவாக சேர்க்கவும். மாவு கிளறும் பொழுது உப்பு குறைவாக இருந்தாலும் அது காய்ந்து நாம் எண்ணெயில் பொரிக்கும் பொழுது Correctஆக இருக்கும். அதனால் உப்பு சேர்ப்பதில் கவனமாக இருக்கும்.
அவரவர் காரத்திற்கு ஏற்ப பச்சைமிளகாயினை சேர்க்கவும். ஆனால் கண்டிப்பாக, இதில் புதினா, கொத்தமல்லி, சோம்பு சேர்க்கவும். அப்படி சேர்ப்பதால் தான் பகோடா மாதிரி சூப்பராக இருக்கும்.
விரும்பினால் இதில் ஜவ்வரிசி சேர்க்கலாம். ஜவ்வரிசி சேர்ப்பதாக இருந்தால் ஜவ்வரிசியினை முதல் நாள் இரவே தேவையான அளவு தண்ணீரில் ஊறவைத்து கொள்ளவும்.
கண்டிப்பாக வத்தலினை வெயிலில் நன்றாக காயவைக்கவும். அப்படி செய்தால் தான் வத்தல் நாள்பட நன்றாக இருக்கும்.
நீங்களூம் செய்து பார்த்துவிட்டு உங்கள் அன்பான கருத்தினை தெரிவிக்கவும்...
வத்தல் செய்ய தேவைப்படும் நேரம்: குறைந்தது 2 நாட்கள்
தேவையான பொருட்கள் :
. அரிசி மாவு - 2 கப்
. தண்ணீர் - 8 கப் + 2 கப் மாவு கரைப்பதற்கு
. உப்பு - 1 தே.கரண்டி
--------------------------
. சோம்பு - 1 தே.கரண்டி
. சிவப்பு வெங்காயம் - 1
. பச்சை மிளகாய் - 3 - 4
. இஞ்சி - 1 தே.கரண்டி பொடியாக நறுக்கியது
. புதினா , கொத்தமல்லி - சிறிதளவு
செய்முறை :
. அரிசி மாவினை 2 - 3 கப் தண்ணீர் சேர்த்து நன்றாக கெட்டி இல்லாமல் கரைத்து கொள்ளவும்.
. வெங்காயம் + பச்சை மிளகாய் + இஞ்சி + புதினா, கொத்தமல்லியினை மிகவும் பொடியாக நறுக்கி வைக்கவும்.
. ஒரு அகலமான பாத்திரத்தில் 8 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
. தண்ணீர் கொதிக்க ஆரம்பிக்கும் பொழுது நறுக்கி வைத்த பொருட்கள் + சோம்பு + தேவையான அளவு உப்பு சேர்த்து 3 - 4 நிமிடங்கள் வேகவிடவும்.
. பிறகு, அதில் கரைத்து வைத்துள்ள அரிசி மாவினை கொட்டி கட்டிப்படாமல் நன்றாக கிளறி வேகவிடவும். மாவு கண்டிப்பாக நன்றாக வேகவேண்டும்.(கவனிக்க : மாவு வெந்ததா என்று பார்க்க மாவினை கையில் தொட்டு பார்த்தால் வெந்த மாவு கையில் ஒட்டாது. )
. வேகவைத்த பொருட்களை சிறிது நேரம் ஆறவிட்ட பிறகு சிறிது சிறிதாக கிள்ளி வத்தல் போடவும்.
. இதனை தட்டில் / Trayயில் வைத்து கொள்ளவும். அதனை அப்படியே வெயிலில் வைத்துவிடவும். (நான் Balconyயில் வைத்து காயவைத்து இருக்கின்றேன். )
. Evening பார்த்தால் நன்றாக காய்ந்து இருக்கும். பிறகு அதனை வீட்டின் உள்ளே வைத்து கொள்ளவும்.
. திரும்பவும் மறுநாள் காலையில் எடுத்து வெளியில் வைத்து காயவிடவும். வெயில் நன்றாக காய்ந்தால், வத்தல் சீக்கிரமாக காய்ந்துவிடும்.
. கண்டிப்பாக 2 - 3 நாட்கள் ஆகும் வத்தல் காய. அதனால் வெயில் அதிகம் இருக்கும் பொழுது இதனை செய்யவும்.
. இப்பொழுது வத்தல் நன்றாக காய்ந்து இருக்கும். இந்த வத்தலினை எண்ணெயில் பொரித்து எடுத்து பறிமாறவும். இது பொரிக்கும் பொழுது சூப்பராக பகோடா பொரிப்பது போல இருக்கும்.
. சூப்பரான பகோடா வத்தல் ரெடி.
தாளிக்கு வடகம் - Thalippu Vadagam Recipe - Summer / Gramathu Recipe
Posted by
GEETHA ACHAL
at
Monday, May 04, 2015
Labels:
Friendship 5 Series,
Gramathu Samayal,
எப்படி செய்வது - How to Make It?,
சமையல் டிப்ஸ்

வடகம் செய்யும் பொழுது கவனிக்க வேண்டிய சில,
இதற்கு சின்ன வெங்காயம் சேர்த்து செய்தால் தான் நன்றாக இருக்கும். பெரிய வெங்காயம் சேர்ப்ப்தால இருந்தால் பொடியாக நறுக்கி சேர்க்கவும். அதே மாதிரி பெரிய வெங்காயம் சேர்த்தால் வடகம் காய கூடுதலாக நாட்கள் ஆகும்.
இதில் கொடுத்துள்ள அளவில் செய்தால் 10 பெரிய உருண்டைகள் வரும்.
வடகத்தினை விளக்கு எண்ணெய் / நல்லெண்ணெய் சேர்த்து கலந்து வைப்பது நல்லது. வேற எந்த எண்ணெயினையும் பயன்படுத்த வேண்டாம்.
பூண்டுயினை விரும்பினால் தோலுடனே சேர்த்து செய்யலாம். அதே மாதிரி மிக்ஸியில் அரைக்காமல் நசுக்கி கொள்ளலாம் அல்லது பொடியாக நறுக்கி சேர்க்கலாம்.
அதே மாதிரி வடகத்தினை கொடுத்துள்ள செய்முறை படி செய்தால் நன்றாக இருக்கும். நன்றாக வெயில் இருக்கும் பொழுது காய வைக்கவும்.
நான் USயில் இருக்கும் பொழுது வருட வருடம் செய்வேன். இப்பொழுது கனடா வந்த பிறகு இந்த வருடம் தான் செய்தேன். நன்றி மேனகா.
நீங்களும் செய்து பார்த்துவிட்டு உங்கள் அன்பான கருத்தினை தெரிவிக்கவும்...
வடகம் செய்ய தேவைப்படும் நேரம் : குறைந்தது 3 - 4 நாட்கள் - 1 வாரம்
தேவையான பொருட்கள் :
. தோல் நீக்கிய சின்ன வெங்காயம் - 1/4 கிலோ
. பூண்டு - 2 பெரியது (சுமார் 20 பூண்டு பல் )
. கருவேப்பிலை - 1 கைபிடி இலைகள்
. உளூத்தம் பருப்பு - 3 மேஜை கரண்டி
. கடுகு - 1 மேஜை கரண்டி
. சீரகம் - 1 மேஜை கரண்டி
. சோம்பு - 1 மேஜை கரண்டி
. வெந்தயம் - 1 மேஜை கரண்டி (விரும்பினால் சிறிது குறைத்து கொள்ளவும்)
. மஞ்சள் தூள் - 1 தே.கரண்டி
. உப்பு - 2 மேஜை கரண்டி
. விளக்கு எண்ணெய் - 2 - 3 மேஜை கரண்டி
1 தே.கரண்டி - 1 Teaspoon , 1 மேஜை கரண்டி - 1 Table spoon
செய்முறை :
. சின்ன வெங்காயத்தினை தோல் நீக்கி வைக்கவும். (கவனிக்க : 1 pound/lb வெங்காயம் தோல் நீக்கியது சுமராக 250 gram தான் இருக்கும். )
. அதே மாதிரி பூண்டினையும் தோல் நீக்கி வைக்கவும். (சிலர் பூண்டினை தோலுடனே சேர்ப்பாங்க. நான் தோலினை எப்பொழுது எடுத்துவிடுவேன். )
. சின்ன வெங்காயம் + பூண்டியினை சேர்த்து மிக்ஸியில் போட்டு 2 - 3 முறை Pulse Modeயில் அரைக்கவும். (கவனிக்க : கண்டிப்பாக ஒன்றும் பாதியுமாக தான் அரைக்க வேண்டும். விரும்பினால் மிக்ஸியில் அரைப்பதற்கு பதிலாக பொடியாக நறுக்கி கொள்ளலாம். )
. தட்டி வைத்துள்ள வெங்காயம் பூண்டுடன், மஞ்சள் தூள் + கருவேப்பிலை + உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.
. இத்துடன் சேர்க்க கொடுத்துள்ள மற்ற பொருட்கள் (கடுகு, சீரகம், வெந்தயம், சோம்பு, உளுத்தம்பருப்பு) சேர்த்து நன்றாக கலந்து முதல் நாள் இரவே ஊறவைத்து கொள்ளவும்.
. மறுநாள் காலையில் அதனை சிறிய சிறிய உருண்டைகளாக, தண்ணீர் பிழிந்து பிடித்து கொள்ளவும். (நான் உருண்டைகளாக பிடித்து அது சீக்கிரம் காய வேண்டும் என்பதால் உதிர்த்து காயவைத்தேன். )
. ஒரு தட்டில் கொட்டி, வெயில் நன்றாக படும் இடத்தில் வைத்து காய வைக்கவும்.
. சாயங்காலம், காய்ந்த பொருட்களை திரும்பவும் அதே பிழிந்த தண்ணீரில் போட்டு கலந்துவிடவும்.
. திரும்பவும் மறுநாள் காலை அதே மாதிரி காயவைக்கவும். அதே மாதிரி மாலையில் திரும்பவும் அனைத்தும் கலந்துவிடவும்.
. இதே மாதிரி அனைத்து நன்றாக தண்ணீர் இல்லாமல் காய வேண்டும். (இதற்கு சுமார் 3 நாட்கள் ஆகும். இதுவே உருண்டை பிடித்து காயவைத்தால் 10 நாட்களுக்கு மேல் ஆகும். )
. அனைத்து நன்றாக காய்ந்த பிறகு, அத்துடன் விளக்கு எண்ணெய் சேர்த்து கலந்து உருண்டைகளாக பிடித்து வைக்கவும்.
. சூப்பரான தாளிக்கும் வடாம் ரெடி. குழம்பு வகைகள் தாளிக்கும் பொழுது இதனை சேர்த்தால் ரொம்ப நன்றாக இருக்கும்.
Subscribe to:
Posts (Atom)