பகோடா வத்தல் - Pakoda Vathal Recipe - Vadam Recipe - Summer Special Recipes


print this page PRINT
இந்த வத்தல் போடும் பொழுது கவனிக்க வேண்டிய சில டிப்ஸ் ,
இதில் அரிசி மாவு வைத்து செய்து இருக்கின்றேன். எப்பொழுதும் 1 கப் அரிசி மாவிற்கு 4 கப் தண்ணீர் என்ற Ratioவில் ( 1 : 4)  சேர்த்து கொள்ளவும்.

மாவு கரைக்க பொழுது 1 கப் அரிசி மாவிற்கு 1 கப் தண்ணீர் தனியாக எடுத்து கொள்ளவும்.  அப்படி பார்த்தால் மொத்தமாக 1 கப் அரிசி மாவுக்கு 5 கப் தண்ணீர் வரும்.

எப்பொழுது வத்தல் போடும் பொழுது உப்பினை சிறிது குறைவாக சேர்க்கவும். மாவு கிளறும் பொழுது உப்பு குறைவாக இருந்தாலும் அது காய்ந்து நாம் எண்ணெயில் பொரிக்கும் பொழுது Correctஆக இருக்கும். அதனால் உப்பு சேர்ப்பதில் கவனமாக இருக்கும்.

அவரவர் காரத்திற்கு ஏற்ப பச்சைமிளகாயினை சேர்க்கவும். ஆனால் கண்டிப்பாக, இதில் புதினா, கொத்தமல்லி, சோம்பு சேர்க்கவும். அப்படி சேர்ப்பதால் தான் பகோடா மாதிரி சூப்பராக இருக்கும்.

விரும்பினால் இதில் ஜவ்வரிசி சேர்க்கலாம். ஜவ்வரிசி சேர்ப்பதாக இருந்தால் ஜவ்வரிசியினை முதல் நாள் இரவே தேவையான அளவு தண்ணீரில் ஊறவைத்து கொள்ளவும். 

கண்டிப்பாக வத்தலினை வெயிலில் நன்றாக காயவைக்கவும். அப்படி செய்தால் தான் வத்தல் நாள்பட நன்றாக இருக்கும்.

நீங்களூம் செய்து பார்த்துவிட்டு உங்கள் அன்பான கருத்தினை தெரிவிக்கவும்...

வத்தல் செய்ய தேவைப்படும் நேரம்: குறைந்தது 2 நாட்கள்
தேவையான பொருட்கள் :
  .  அரிசி மாவு - 2 கப்
  .  தண்ணீர் - 8 கப் + 2 கப் மாவு கரைப்பதற்கு
  .  உப்பு - 1 தே.கரண்டி
--------------------------
  .  சோம்பு - 1 தே.கரண்டி
  .  சிவப்பு வெங்காயம் - 1 
  .  பச்சை மிளகாய் - 3 - 4
  .  இஞ்சி - 1 தே.கரண்டி பொடியாக நறுக்கியது
  .  புதினா , கொத்தமல்லி - சிறிதளவு


செய்முறை :
  .  அரிசி மாவினை 2 - 3 கப் தண்ணீர் சேர்த்து நன்றாக கெட்டி இல்லாமல் கரைத்து கொள்ளவும்.


  .  வெங்காயம் + பச்சை மிளகாய் + இஞ்சி + புதினா, கொத்தமல்லியினை மிகவும் பொடியாக நறுக்கி வைக்கவும்.

  .  ஒரு அகலமான பாத்திரத்தில் 8 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.


  .  தண்ணீர் கொதிக்க ஆரம்பிக்கும் பொழுது நறுக்கி வைத்த பொருட்கள் + சோம்பு + தேவையான அளவு உப்பு சேர்த்து 3 - 4 நிமிடங்கள் வேகவிடவும்.


  .  பிறகு, அதில் கரைத்து வைத்துள்ள அரிசி மாவினை கொட்டி கட்டிப்படாமல் நன்றாக கிளறி வேகவிடவும். மாவு கண்டிப்பாக நன்றாக வேகவேண்டும்.(கவனிக்க : மாவு வெந்ததா என்று பார்க்க மாவினை கையில் தொட்டு பார்த்தால் வெந்த மாவு கையில் ஒட்டாது. )


  .  வேகவைத்த பொருட்களை சிறிது நேரம் ஆறவிட்ட பிறகு சிறிது சிறிதாக கிள்ளி வத்தல் போடவும்.

  .  இதனை தட்டில் / Trayயில் வைத்து கொள்ளவும். அதனை அப்படியே வெயிலில் வைத்துவிடவும்.  (நான் Balconyயில் வைத்து காயவைத்து இருக்கின்றேன். )


  .  Evening பார்த்தால் நன்றாக காய்ந்து இருக்கும். பிறகு அதனை வீட்டின் உள்ளே வைத்து கொள்ளவும்.

  .  திரும்பவும் மறுநாள் காலையில் எடுத்து வெளியில் வைத்து காயவிடவும். வெயில் நன்றாக காய்ந்தால், வத்தல் சீக்கிரமாக காய்ந்துவிடும்.

  .  கண்டிப்பாக 2 - 3 நாட்கள் ஆகும் வத்தல் காய. அதனால் வெயில் அதிகம் இருக்கும் பொழுது இதனை செய்யவும்.

  .  இப்பொழுது வத்தல் நன்றாக காய்ந்து இருக்கும். இந்த வத்தலினை எண்ணெயில் பொரித்து எடுத்து பறிமாறவும். இது பொரிக்கும் பொழுது சூப்பராக பகோடா பொரிப்பது போல இருக்கும்.


  .  சூப்பரான பகோடா வத்தல் ரெடி.


Linking this post to "Friendship 5 series" started by Geetha Achal & Savitha...1 comments:

nandoos Kitchen said...

nice one dear.. I have always wanted to try this..

Related Posts Plugin for WordPress, Blogger...