பூண்டு தக்காளி சட்னி - Poondu Thakkali Chutney Recipe - Garlic Tomato Chutney - Sidedish for Idli / Dosai


print this page PRINT

சட்னி செய்ய தேவைப்படும் நேரம் : 10 - 15 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
  .  பூண்டு - 15 - 20 பல் தோல் நீக்கியது
  .  தக்காளி - 1 பெரியது
  .  காய்ந்த மிளகாய் - 8 - 10
  .  புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
  .  உப்பு - தேவையான அளவு

தாளிக்க :
  .  எண்ணெய் - 2 மேஜை கரண்டி
  .  கடுகு, உளுத்தம் பருப்பு - தாளிக்க
  .  கருவேப்பிலை - 5 இலை


செய்முறை :
  .  பூண்டியினை தோல் நீக்கி வைத்து கொள்ளவும். தக்காளியினை பெரிய துண்டுகளாக வெட்டி வைக்கவும்.

  .  மிக்ஸியில் முதலில் காய்ந்த மிளகாயினை போட்டு பொடித்து கொள்ளவும்.


  .  இத்துடன் பூண்டு + புளியினை சேர்த்து அரைத்து கொள்ளவும்.


 .  பிறகு, அதில் நறுக்கிய தக்காளியினை சேர்த்து மேலும் அரைத்து கொள்ளவும்.


  .  கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு + உளூத்தம்பருப்பு + கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். 


  .  அதில் அரைத்த விழுது + 1/4 Cup தண்ணீர் + தேவையான அளவு உப்பு சேர்த்து 5 - 6 நிமிடங்கள் வேகவிடவும்.

  .  சுவையான பூண்டு சட்னி ரெடி. இதனை இட்லி/ தோசையுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.


3 comments:

Sathya- MyKitchenodyssey said...

Romba rusiya irukum Arumai

ரூபன் said...

வணக்கம்
விளக்கம் அருமையாக உள்ளது செய்வதற்கு நன்று. பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

ரூபன் said...

வணக்கம்
விளக்கம் அருமையாக உள்ளது செய்வதற்கு நன்று. பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Related Posts Plugin for WordPress, Blogger...