தாளிக்கு வடகம் - Thalippu Vadagam Recipe - Summer / Gramathu Recipe


print this page PRINT
வடகம் செய்யும் பொழுது கவனிக்க வேண்டிய சில,

இதற்கு சின்ன வெங்காயம் சேர்த்து செய்தால் தான் நன்றாக இருக்கும். பெரிய வெங்காயம் சேர்ப்ப்தால இருந்தால் பொடியாக நறுக்கி சேர்க்கவும். அதே மாதிரி பெரிய வெங்காயம் சேர்த்தால் வடகம் காய கூடுதலாக நாட்கள் ஆகும்.

இதில் கொடுத்துள்ள அளவில் செய்தால் 10 பெரிய உருண்டைகள் வரும்.

வடகத்தினை விளக்கு எண்ணெய் / நல்லெண்ணெய் சேர்த்து கலந்து வைப்பது நல்லது. வேற எந்த எண்ணெயினையும் பயன்படுத்த வேண்டாம்.

பூண்டுயினை விரும்பினால் தோலுடனே சேர்த்து செய்யலாம்.  அதே மாதிரி மிக்ஸியில் அரைக்காமல் நசுக்கி கொள்ளலாம் அல்லது பொடியாக நறுக்கி சேர்க்கலாம்.

அதே மாதிரி வடகத்தினை கொடுத்துள்ள செய்முறை படி செய்தால் நன்றாக இருக்கும்.  நன்றாக வெயில் இருக்கும் பொழுது காய வைக்கவும்.

நான் USயில் இருக்கும் பொழுது வருட வருடம் செய்வேன். இப்பொழுது கனடா வந்த பிறகு இந்த வருடம் தான் செய்தேன். நன்றி மேனகா.

நீங்களும் செய்து பார்த்துவிட்டு உங்கள் அன்பான கருத்தினை தெரிவிக்கவும்...

வடகம் செய்ய தேவைப்படும் நேரம் : குறைந்தது 3 - 4 நாட்கள் - 1 வாரம்
தேவையான பொருட்கள் :
  .  தோல் நீக்கிய சின்ன வெங்காயம் - 1/4 கிலோ 
  .  பூண்டு - 2 பெரியது (சுமார் 20 பூண்டு பல் )
  .  கருவேப்பிலை - 1 கைபிடி இலைகள்
  .  உளூத்தம் பருப்பு - 3 மேஜை கரண்டி
  .  கடுகு - 1 மேஜை கரண்டி
  .  சீரகம் - 1 மேஜை கரண்டி
  .  சோம்பு - 1 மேஜை கரண்டி
  .  வெந்தயம் - 1 மேஜை கரண்டி (விரும்பினால் சிறிது குறைத்து கொள்ளவும்)
  .  மஞ்சள் தூள் - 1 தே.கரண்டி
  .  உப்பு - 2 மேஜை கரண்டி
  .  விளக்கு எண்ணெய் - 2 - 3 மேஜை கரண்டி

1 தே.கரண்டி - 1 Teaspoon , 1 மேஜை கரண்டி - 1 Table spoon


செய்முறை :
  .  சின்ன வெங்காயத்தினை தோல் நீக்கி வைக்கவும். (கவனிக்க : 1 pound/lb வெங்காயம் தோல் நீக்கியது சுமராக 250 gram தான் இருக்கும். )

  .  அதே மாதிரி பூண்டினையும் தோல் நீக்கி வைக்கவும். (சிலர் பூண்டினை தோலுடனே சேர்ப்பாங்க. நான் தோலினை எப்பொழுது எடுத்துவிடுவேன். )


  .  சின்ன வெங்காயம் + பூண்டியினை சேர்த்து மிக்ஸியில் போட்டு 2 - 3 முறை Pulse Modeயில் அரைக்கவும். (கவனிக்க : கண்டிப்பாக  ஒன்றும் பாதியுமாக தான் அரைக்க வேண்டும். விரும்பினால் மிக்ஸியில் அரைப்பதற்கு பதிலாக பொடியாக நறுக்கி கொள்ளலாம். )


  .  தட்டி வைத்துள்ள வெங்காயம் பூண்டுடன், மஞ்சள் தூள் + கருவேப்பிலை + உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.


  .  இத்துடன் சேர்க்க கொடுத்துள்ள மற்ற பொருட்கள் (கடுகு, சீரகம், வெந்தயம், சோம்பு, உளுத்தம்பருப்பு) சேர்த்து நன்றாக கலந்து முதல் நாள் இரவே ஊறவைத்து கொள்ளவும்.


  .  மறுநாள் காலையில் அதனை சிறிய சிறிய உருண்டைகளாக, தண்ணீர் பிழிந்து பிடித்து கொள்ளவும். (நான் உருண்டைகளாக பிடித்து அது சீக்கிரம் காய வேண்டும் என்பதால் உதிர்த்து காயவைத்தேன். )


  .  ஒரு தட்டில் கொட்டி, வெயில் நன்றாக படும் இடத்தில் வைத்து காய வைக்கவும்.

  .  சாயங்காலம், காய்ந்த பொருட்களை திரும்பவும் அதே பிழிந்த தண்ணீரில் போட்டு கலந்துவிடவும்.


  .  திரும்பவும் மறுநாள் காலை அதே மாதிரி காயவைக்கவும். அதே மாதிரி மாலையில் திரும்பவும் அனைத்தும் கலந்துவிடவும்.

  .  இதே மாதிரி அனைத்து நன்றாக தண்ணீர் இல்லாமல் காய வேண்டும். (இதற்கு சுமார் 3 நாட்கள் ஆகும். இதுவே உருண்டை பிடித்து காயவைத்தால் 10 நாட்களுக்கு மேல் ஆகும். )


  .  அனைத்து நன்றாக காய்ந்த பிறகு, அத்துடன் விளக்கு எண்ணெய் சேர்த்து கலந்து உருண்டைகளாக பிடித்து வைக்கவும்.


  .  சூப்பரான தாளிக்கும் வடாம் ரெடி. குழம்பு வகைகள் தாளிக்கும் பொழுது இதனை சேர்த்தால் ரொம்ப நன்றாக இருக்கும்.Linking this post to "Friendship 5 series" started by Geetha Achal & Savitha...


2 comments:

stalin wesley said...

நன்றி

Veena Theagarajan said...

one of my handy masala for quick seasoning .. Flavourful

Related Posts Plugin for WordPress, Blogger...