தினை அரிசி இட்லி & தோசை - Thinai Arisi Idli & Dosai Recipe - Millet Breakfast Ideasprint this page PRINT

எளிதில் செய்ய கூடிய சத்தான சுவையான இட்லி.

நான் எப்பொழுதும் அரிசி : உளுத்தமபருப்புக்கு 1: 3 Ratioவில் தான் மிக்ஸியில் அரைப்பேன். Grinderயில் அரைப்பதாக இருந்தால் , அரிசி : உளுத்தமபருப்புக்கு 1: 4 Ratioவில் அரைக்கலாம்.

அதனால் தான் தினை - 2 கப் , இட்லி அரிசி - 1 கப் என்றால் 3 கப் வரும். Grinderயில் அரைப்பதாக இருந்தால் தினை - 3 கப் , இட்லி அரிசி - 1 கப் என்ற அளவில் எடுத்து கொள்ளவும்.

இந்த இட்லி வெள்ளை கலரில் இல்லாமல் சிறிது பழுப்பு நிறத்தில் தான் இருக்கும். அது தினையின் தன்மையினை பொருத்தது. ஆனால் சுவை சூப்பராக இருக்கும்.

USயில் இருக்கின்றவங்க, தினையிற்கு,  Bob's Red Milletயினை வாங்கி இதே மாதிரி செய்து பார்க்கலாம்.

எப்பொழுதும் இட்லி மாவினை, புளித்த பிறகு 1 - 2 முறை கரண்டியினை வைத்து கலக்கினால் போதும். அதிகம் கலக்க வேண்டாம்.

நீங்களூம் செய்து பார்த்துவிட்டு உங்கள் அன்பான கருத்தினை தெரிவிக்கவும்.

தினை ஊறவைக்க : 2 - 3 மணி நேரம்
மாவு புளிக்க வைக்க : குறைந்தது 6 மணி நேரம்
தேவையான பொருட்கள் :
  .  தினை / Thinai Arisi - 2 கப்
  .  இட்லி அரிசி - 1 கப்
  .  உளுத்தம்பருப்பு - 1 கப்
  .  வெந்தயம் - 1/4 தே.கரண்டி
  .  உப்பு - 1 தே.கரண்டி


செய்முறை :
  .  தினை + இட்லி அரிசி + உளுத்தம்பருப்பு, வெந்தயம் அனைத்தும் நன்றாக கழுவி தேவையான அளவு தண்ணீர் சேர்த்து குறைந்தது 2 - 3 மணி நேரம் ஊறவைத்து கொள்ளவும்.


  .  மிக்ஸியில் முதலில் ஊறவைத்த உளுத்தம்பருப்பு, வெந்தயத்தினை + சிறிது தண்ணீர் சேர்த்து மைய அரைத்து கொள்ளவும்.

  .  அதன்பிறகு, அதில் தினை + இட்லி அரிசி + சிறிது தண்ணீர் சேர்த்து மைய அரைக்கவும்.

  .  அரைத்த இரண்டு மாவினையும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கரைத்து கொள்ளவும்.


  .  மாவினை அப்படியே தட்டு போட்டு மூடி சுமார் 6 - 8 Hours,  புளிக்கவிடவும். (முதல் நாள் இரவு / மாலையில் மாவு அரைத்தால், மறுநாள் காலையில் இட்லி செய்யலாம். )

  .  புளித்த மாவு இப்பொழுது பொங்கிவந்து இருக்கும். அதனை கரண்டி வைத்து 1 - 2 முறை மட்டும் கலந்துவிடவும்.


 .  இட்லி தட்டில் மாவினை ஊற்றி, இட்லி வேகவைக்கும் பாத்திரத்தில் வைத்து 8 - 10 நிமிடங்கள் வேகவிடவும்.

  .  இதே மாதிரி தோசை கல்லினை காயவைத்து, தோசைகளை சுடவும். 


 .  சுவையான சத்தான இட்லி, தோசை ரெடி. இத்துடன் தக்காளி சட்னி, சாம்பார் போன்றவையுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.Linking this post to "Friendship 5 series" started by Geetha Achal & Savitha...

1 comments:

great-secret-of-life said...

very healthy breakfast.. so soft too

Related Posts Plugin for WordPress, Blogger...