இட்லி புட்டு - Instant Idli Puttu Recipe - Instant Breakfast Ideas


print this page PRINT
இது எளிதில் செய்ய கூடிய புட்டு. மீதமான இட்லியில் எப்பொழுது இட்லி உப்புமா செய்யாமல், ஒரு மாறுதலாக இதில் புட்டு செய்தேன்...

நீங்களூம் செய்து பார்த்துவிட்டு உங்கள் அன்பான கருத்தினை தெரிவிக்கவும்,,,

புட்டு செய்ய தேவைப்படும் நேரம் : 5 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
  .  மீதமான இட்லிகள் - 6
  .  தேங்காய் துண்டுகள் - 2 பெரியது 
  .  ஏலக்காய் - 2
  .  சக்கரை - 2 மேஜை கரண்டி
  .  நெய் - 1 தே.கரண்டி

செய்முறை :
  .  தேங்காய் துண்டுகள் + ஏலக்காய் சேர்த்து மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்து வைக்கவும். (விரும்பினால் தேங்காயினை அரைப்பதற்கு பதிலாக துறுவி கொள்ளலாம். )


  .  மீதமான இட்லிகளை மிக்ஸியில் போட்டு 2 - 3 முறை Pulse Modeயில் அடித்து உதிர்த்து கொள்ளவும்.


  .  உதிர்த்து வைத்து இருக்கும் இட்லியினை Microwaveயில் வைத்து 1 நிமிடம் சூடுபடுத்தி கொள்ளவும்.


  .  இத்துடன் நெய் + தேங்காய் துறுவல் + சக்கரை சேர்த்து கலந்து கொள்ளவும்.


  .  சுவையான எளிதில் செய்ய கூடிய இட்லி புட்டு ரெடி. Linking this post to "Friendship 5 series" started by Geetha Achal & Savitha...

2 comments:

trail and error said...

very innovative

ரூபன் said...

வணக்கம்
செய்முறை விளக்கத்துடன் அசத்தல் அருமையாக உள்ளது பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Related Posts Plugin for WordPress, Blogger...