தேங்காய் மசாலா இடியாப்பம் - Masala Idiyappam Recipe - Instant Breakfast Ideas


print this page PRINT
எளிதில் செய்ய கூடிய மசாலா இடியாப்பம் ....

நீங்களூம் செய்து பார்த்துவிட்டு உங்கள் அன்பான கருத்தினை தெரிவிக்கவும்....

செய்ய தேவைப்படும் நேரம் : 10 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
இடியாப்பம் - 10 - 12

அரைத்து கொள்ள :
   .  தேங்காய் துறுவல் - 1 கப்
   .  சின்ன வெங்காயம் - 5
   .  காய்ந்த மிளகாய் - 5 - 8 (காரத்திற்கு ஏற்ப)
   .  எலுமிச்சை சாறு - 1 மேஜை கரண்டி
   .  சோம்பு - 1/2 தே.கரண்டி
   .  உப்பு - தேவையான அளவு

தாளித்து சேர்க்க : (விரும்பினால் தாளித்து சேர்க்கவும்......)
   .  எண்ணெய் - 1 தே.கரண்டி
   .  தாளிப்பு வடகம் - 1/2 தே.கரண்டி
   .  கருவேப்பிலை - 5 இலை


செய்முறை :
.   சின்ன வெங்காயத்தின் தோலினை நீக்கிவிடவும். காய்ந்த மிளாயினை கடாயில் போட்டு 1 நிமிடம் வறுத்து கொள்ளவும். 

.   அதே கடாயில் எண்ணெய் ஊற்றி சோம்பு வறுத்து வைக்கவும்..   மிக்ஸியில் முதலில் காய்ந்த மிளகாயினை போட்டு நன்றாக பொடித்து கொள்ளவும்.

. அத்துடன் தேங்காய் துறுவல் + வெங்காயம் + சோம்பு சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும். கடைசியில் சோம்பு + எலுமிச்சை சாறு + உப்பு சேர்த்து அத்துடன் கலக்கவும்.

.  தாளிக்கும் வடக்கத்தினை எண்ணெயில் போட்டு தாளித்து அரைத்த கலவையுடன் சேர்த்து கலந்துவிடவும்.

.   அனைத்து பொருட்களையும் இடியாப்பத்துடன் சேர்த்து கலந்து பறிமாறவும்.

.   சுவையான மசாலா இடியாப்பம் ரெடி....Linking this post to "Friendship 5 series" started by Geetha Achal & Savitha...


1 comments:

Indian Restaurant said...

Wonderful Recipe. Pretty much ideal .. Thanks for sharing...
Indian Restaurants in South Campus

Related Posts Plugin for WordPress, Blogger...