மஷ்ரூம் பிரியாணி - Mushroom Biryani Recipe - Simple Dum Biryani Recipe


print this page PRINT
எளிதில் செய்ய கூடிய சத்தான பிரியாணி..

நீங்களூம் செய்து பார்த்துவிட்டு உங்கள் அன்பான கருத்தினை தெரிவிக்கவும்...

சமைக்க தேவைப்படும் நேரம் : 30 - 40 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
   .  மஷ்ரூம் - 2 கப்
   .  பாஸ்மதி அரிசி - 2 கப்
   .  வெங்காயம் - 1
   .  இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 மேஜை கரண்டி
   .  புதினா, கொத்தமல்லி - 1 கைபிடி அளவு
   .  தயிர் - 2 மேஜை கரண்டி
   .  எலுமிச்சை  - 1/2 பழம்
   .  நெய் - 1 தே.கரண்டி

முதலில் தாளிக்க :
   .  எண்ணெய் - 1 மேஜை கரண்டி
   .  பட்டை - 1, கிராம்பு , ஏலக்காய் - தலா 1 , பிரியாணி இலை -1

சேர்க்க வேண்டிய தூள் வகைகள் :
   .  மஞ்சள் தூள் - 1/2 தே.கரண்டி
   .  மிளகாய் தூள் - 1 தே.கரண்டி
   .  கரம் மசாலா தூள் - 1/4 தே.கரண்டி
   .  உப்பு - தேவையான அளவு

செய்முறை :
   .  பாஸ்மதி அரிசியினை கழுவி சுமார் 15 - 20 நிமிடங்கள் ஊறவைத்து கொள்ளவும். வெங்காயத்தினை நீளமாக வெட்டி வைக்கவும். புதினா, கொத்தமல்லியினை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும். 

   .  மஷ்ரூமை நான்காக வெட்டி அதனை கடாயில் போட்டு 2 - 3 நிமிடங்கள் முதலில் வதக்கி தனியாக வைத்து கொள்ளவும். (கவனிக்க : இந்த Step Optional தான்.  விரும்பினால் தாளித்த பிறகு சேர்த்து கொள்ளலாம்..)


   .  பிறகு, கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்கள் சேர்த்து தாளித்து அத்துடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி, அதில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து மேலும் நன்றாக வதக்கி கொள்ளவும்.

   .  வெங்காயம் வதங்கியவுடன் அதில் சேர்க்க கொடுத்துள்ள தூள் வகைகள் + தயிர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

 . அத்துடன் வதக்கிய மஷ்ரூம் + புதினா, கொத்தமல்லி சேர்த்து கலந்துவிடவும்.


   .  அதில் 4 கப் தண்ணீர் + ஊறவைத்த பாஸ்மதி அரிசியினை சிறிய தீயில் வைத்து தட்டு போட்டு மூடி வேகவிடவும். (இதே மாதிரி செய்த வெஜ் பிரியாணி / Veg Biryani பார்க்க க்ளிக் செய்யவும். )


   .  பாஸ்மதி வெந்த பிறகு அதில் 1 தே.கரண்டி நெய் + 1/2 மேஜை கரண்டி அளவு எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து விடவும்.


   .  சுவையான மஷ்ரூம் பிரியாணி ரெடி.


கவனிக்க :
நான் இதில் தக்காளி சேர்க்கவில்லை. விரும்பினால் சேர்த்து கொள்ளவும்.

அதே மாதிரி காரத்திற்கு மிளகாய் தூளிற்கு பதிலாக பச்சை மிளகாயினை பயன்படுத்தலாம்.

இதனை நான் கடாயிலேயே செய்து இருக்கின்றேன். இதனை பிரஸ்ர் குக்கரில் 1 விசில் வரும் வரை சிறிய தீயில் வைத்தும் செய்யலாம்.

Linking this post to "Friendship 5 series" started by Geetha Achal & Savitha...

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...